ராஜு முருகன் அடுத்த படத்தில் இந்த பிரபலம் தான் ஹீரோவா? நாயகி யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Sunday,July 07 2024]

இயக்குனர் ராஜு முருகன் இயக்க இருக்கும் அடுத்த படத்தில் நடிக்கும் நாயகன் மற்றும் நாயகி குறித்த தகவல்களும் இசையமைப்பாளர் குறித்த தகவல்கள் கசிந்து உள்ளது.

தமிழ் திரையுலகில் ’குக்கூ’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பத்திரிகையாளர் ராஜு முருகன் அதன்பின்னர் ’ஜோக்கர்’,’ஜிப்சி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய நிலையில் கடந்த ஆண்டு வெளியான கார்த்தியின் ’ஜப்பான்’ படத்தை இயக்கினார்.

இந்த நிலையில் ராஜுமுருகன் அடுத்த படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அவருடைய அடுத்த படத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தில் பிரபல கன்னட நடிகை சைத்ரா அச்சார் என்பவர் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் இந்த படத்திற்கு சீன் ரோல்டன் தான் இசையமைக்க இருப்பதாகவும் தெரிகிறது. இந்த படத்திற்கான ஆரம்ப கட்ட பணியை விரைவில் ராஜு முருகன் தொடங்குவார் என்றும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

ராஜு முருகனின் முந்தைய படமான ’ஜப்பான்’ எதிர்பார்த்த வெற்றி பெறாத நிலையில் இந்த படம் அவருக்கு வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

தலைவா உனக்கா இந்த நிலைமை? ஆடிய ஆட்டம் என்ன.. பிரேம்ஜி மனைவி வெளியிட்ட வீடியோ.!

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் பிரேம்ஜி திருமணம் சமீபத்தில் நடந்த நிலையில் அவருடைய மனைவி இந்து அவ்வப்போது பிரேம்ஜியின் காமெடி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் என்பதும்

விதை அஜித் போட்டது.. மஞ்சுவாரியரின் பைக் பயண புகைப்படங்களுக்கு குவியும் கமெண்ட்ஸ்..!

பிரபல நடிகை மஞ்சு வாரியர் பைக் பயணம் செய்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்களுக்கு 'விதை அஜித் போட்டது' என்று ரசிகர்கள் கமெண்ட் பகுதியில்

ஒரே டிசைனில் டிரஸ்.. ஆனந்த் அம்பானி - ராதிகா சங்கீத் விழாவில் அட்லி - ப்ரியா.. செம்ம கிளாமர்..!

முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்ட் திருமணத்திற்கு முந்தைய சங்கீத் விழாவில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்ட நிலையில் அதில் அட்லி மற்றும் அவரது மனைவி

அவங்க நல்லா இருக்க மாட்டாங்க.. சுனைனாவுக்கு சாபம் இட்டாரா காலித் முதல் மனைவி..

நடிகை சுனைனா துபாயை சேர்ந்த யூடியூபர் ஒருவரை காதலித்து வருவதாகவும் அவரை விரைவில் திருமணம் செய்ய போவதாகவும் கூறப்படும் நிலையில் அவர் திருமணம் செய்ய போகும்

விருந்துக்கு சென்ற இடத்தில் இந்திரஜாவுக்கு முத்தம் கொடுத்த நடிகையின் கணவர்.. வைரல் புகைப்படம்..!

காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவுக்கு சமீபத்தில் திருமணம் நடந்த நிலையில் ஜோடியாக சமீபத்தில் விருந்துக்கு சென்றதாகவும் அங்கு நடந்த நிகழ்வுகள் குறித்த புகைப்படங்களை