ராஜூமுருகனின் 'ஜோக்கர்' ரிலீஸ் தேதி?

  • IndiaGlitz, [Monday,June 13 2016]

பிரபல பத்திரிகையாளர் ராஜூமுருகன் இயக்கிய 'குக்கூ' திரைப்படம் ரசிகர்களின் ஆதரவை பெற்றதை அடுத்து அவர் இயக்கி வந்த இரண்டாவது படமான 'ஜோக்கர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது.
இந்த படம் இம்மாதமே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ஜூலை 1-ல் வெளியாகும் என கூறப்படுகிறது. இருப்பினும் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறாது.
குருசோமசுந்தரம் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் அறிமுக நாயகிகளான ரம்யா பாண்டியன் மற்றும் காயத்ரி கிருஷ்ணா ஆகியோர் நடித்துள்ளனர். 'சதுரங்க வேட்டை', முண்டாசுப்பட்டி' உள்பட ஒருசில படங்களுக்கு இசையமைத்த சீன் ரோல்டான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் தற்கால அரசியல் குறித்த படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.