ரஜினி மன்றத்தில் இருந்து ராஜூ மகாலிங்கம் நீக்கமா?

  • IndiaGlitz, [Thursday,July 12 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்னும் அரசியல் கட்சியே ஆரம்பிக்கவில்லை. அதற்குள் அவரது ரஜினி மக்கள் மன்றத்தில் ஒருசில குழப்பங்கள் எழுந்துள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் லைகா நிறுவனத்தின் கிரியேட்டிங் தலைவராக இருந்த ராஜூ மகாலிங்கம் ரஜினி மக்கள் மன்றத்தில் இணைந்தார். அவரை 'ரஜினி மக்கள் மன்றத்தின் மாநிலச் செயலாளராக ரஜினிகாந்த் சமீபத்தில் நியமித்தார். ஆனால் கடந்த சில வாரங்களாகவே ரஜினிக்கும் ராஜூ மகாலிங்கம் அவர்களுக்கும் கருத்துவேறுபாடு இருந்ததாகவும் இதனால் இருவரும் சில நாட்களாக சந்தித்து கொள்ளவில்லை என்றும் ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து ராஜு மகாலிங்கம் நீக்கப்பட்டுவிட்டதாகவும் கூறப்பட்டது.

ஆனால் இந்த தகவலை ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகிகள் மறுத்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து ராஜு மஹாலிங்கம் அவர்களை நீக்கி விட்டதாக செய்தி பரவிவருவது உண்மைக்கு புறம்பானது என்றும் இந்த செய்தியை யாரும் நம்ப வேண்டாம் என்று ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

More News

ஸ்ரீரெட்டியின் தமிழ் லீக்ஸ்' ஆரம்பம்: முதல் பலியான முன்னணி ஹீரோ

கடந்த சில மாதங்களாக தெலுங்கு திரையுலகில் ஸ்ரீரெட்டியின் ஸ்ரீலீக்ஸ் புயல் போல் வீசிக்கொண்டிருந்த நிலையில் தற்போது அந்த புயல் கோலிவுட் திரையுலகை நோக்கி திரும்பியுள்ளது.

ரூ.400 கோடி செலவில் திரைப்படமாகும் 'தாய்லாந்து குகை மீட்பு சம்பவம்

எந்த ஒரு பரபரப்பான அல்லது முக்கிய நிகழ்வுகள் உலகின் எந்த மூலையில் நடந்தாலும் அதை சினிமாக்காரர்கள் விட்டுவைப்பதில்லை.

சிம்புவின் சவாலுக்கு அன்புமணியின் ரியாக்சன் என்ன தெரியுமா?

தளபதி விஜய் நடித்து வரும் 'சர்கார்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் விஜய் புகை பிடிப்பது போன்று இருந்ததால் அதற்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்

வினாயகரை விமர்சித்த வழக்கு: பாரதிராஜாவுக்கு நீதிமன்றம் கண்டனம்

பிரபல இயக்குனர் பாரதிராஜா கடந்த சில நாட்களாக ஆக்ரோஷமாக பொது மேடையில் பேசுவதும் களத்தில் இறங்கி போராட்டம் செய்வதுமாக உள்ளார்.

முருகதாஸ் அவர்களே! என்னை ஞாபகம் இருக்கின்றதா? ஸ்ரீரெட்டியின் ஃபேஸ்புக் பதிவு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'சர்கார்' படத்திற்கு வில்லங்கம் மேல் வில்லங்கம் வந்து கொண்டிருக்கின்றது.