லைகாவில் இருந்து விலகி வந்த செயல் அதிகாரிக்கு ரஜினி கொடுத்த முக்கிய பதவி

  • IndiaGlitz, [Thursday,February 15 2018]

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் லைகா நிறுவனத்தின் செயல் அதிகாரியாக இருந்த ராஜூமகாலிங்கம் அவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் ரஜினியுடன் இணைந்து அரசியலில் ஈடுபட போவதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தின் மாநிலச் செயலாளராக ராஜு மகாலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான முறையான அறிவிப்பு ரஜினியிடம் இருந்து வெளிவந்துள்ளது.

லைகா நிறுவனம் தயாரித்து வரும் '2.0' படத்தில் பணியாற்றியபோது ரஜினிக்கும் ராஜூ மகாலிங்கத்திற்கும் நெருக்கம் ஏற்பட்டதாகவும், அதன் அடிப்படையில் தனது பதவியை ராஜினாமா செய்த ராஜூமகாலிங்கம், ரஜினியின் மக்கள் மன்றத்தில் இணைந்து மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ரஜினியின் மன்ற நிர்வாகிகளை சந்தித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

ஐபிஎல் 2018: தல தோனியின் சிஎஸ்கே மோதும் போட்டிகளின் விபரங்கள்

11வது ஐபிஎல் போட்டிகள் வரும் ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி முதல் ஆரம்பமாகவுள்ளது. முதல் போட்டி சென்னை அணிக்கும் மும்பை அணிக்கும் மும்பை மைதானத்தில் நடைபெறவுள்ளது.

பாலா-ஜோதிகாவின் 'நாச்சியார்' படத்தின் ஆச்சரியமான ரன்னிங் டைம்

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கத்தில் ஜோதிகா நடித்த 'நாச்சியார்' திரைப்படம் நாளை முதல் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

காதலர் தினத்தில் விவாகரத்து செய்த தமிழ் நடிகர்

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான 'கனா காணும் காலங்கள்' என்னும் தொடரில் நடித்து பின்னர் பெரிய திரைக்கு அறிமுகமான நடிகர் யுதன் பாலாஜி.

அரசியலுக்கு வந்தபின் சினிமாவுக்கு முழுக்கா? கமல் விளக்கம்

கமல்ஹாசன் வரும் 21ஆம் தேதி அரசியல் கட்சியை ஆரம்பிக்கவுள்ள நிலையில் இனிமேல் அவர் புதிய சினிமாக்களில் நடிக்க மாட்டார் என்றும் 'இந்தியன் 2' படத்தில் நடிப்பார் என்றும் கூறப்பட்டது.

அமெரிக்க பள்ளியில் பயங்கர துப்பாக்கி சூடு: 19 வயது முன்னாள் மாணவன் கைது

புளோரிடோ மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் முன்னாள் மாணவன் நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலில் இதுவரை 17 பேர் பலியாகியுள்ளதாகவும், 50 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் திடுக்கிடும் செய்தி வெளிவந்துள்ளது