ராஜுவ் காந்தி கேல் ரத்னா விருது: ஈட்டி எறிதல் சாம்பியன் நீரஜ் சோப்ரா பெயர் பரிந்துரை!!!
- IndiaGlitz, [Friday,June 05 2020]
இந்தியாவில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ராஜுவ் காந்தி கேல் ரத்னா விருது மற்றும் அர்ஜுனா விருது போன்றவை வழங்கி சிறப்பிக்கப்படுவது வழக்கம். தற்போது இந்த ஆண்டுக்கான ராஜுன் காந்தி கேல் ரத்னா விருதுக்கு தடகள வீரர் மற்றும் ஈட்டி எறிதல் போட்டிகளில் சாம்பியனாக விளங்கும் நீரஜ் சோப்ரா பெயர் பரிந்துரைக்கப் பட்டுள்ளது. 22 வயதான நீரஜ் சோப்ரா ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
கடந்த 2018 ஆம் ஆண்டு காமன்வெல்த் மற்றும் ஜகார்த்தா போட்டிகளில் கலந்து கொண்டு இந்தியா சார்பில் ஈட்டி எறிதல் பிரிவுகளில் தங்கத்தை வென்றார். கடந்த ஆண்டு இவருக்கு முழங்காலில் செய்யப்பட்ட அறுவைச் சிகிச்சையினால் டோஹா உலகக் கோப்பை போட்டிகள் மற்றும் டையமண்ட் போட்டிகளில் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வந்தார். தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டில் 87.86 மீட்டரில் ஈட்டி எறிந்து உலகக் கோப்பைக்கும் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனவரி 1, 2010 இல் இருந்து 2019 டிசம்பர் 31 ஆகிய காலக் கட்டத்திற்கான ராஜுவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு பெயரை பரிந்துரைக்குமாறு கேட்டுக் கொள்ளப் பட்டது. அதையடுத்து இந்திய தேசிய விளையாட்டுக் கழகம் நீரஜ் சோப்ராவின் பெயரை பரிந்துரை செய்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.