பாவனியை லவ் பண்றியா? ராஜூ கேட்ட கேள்வியால் அதிர்ந்த போட்டியாளர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டில் இன்று நடைபெறும் ஒரு டாஸ்க்கில் பாவனியை லவ் பண்றியா என போட்டியாளர் ஒருவரை பார்த்து ராஜூ கேட்டவுடன் அந்த போட்டியாளர் அதிர்ச்சி அடைந்த காட்சிகள் இன்றைய அடுத்த புரமோவில் உள்ளன.
பிக்பாஸ் வீட்டில் இன்று ’டூ ஆர் டெத்’ என்ற டாஸ்க் போட்டியாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த டாஸ்க்கில் ஒரு பாட்டில் மேஜைமீது சுற்றப்பட வேண்டும். அந்த பாட்டில் யாரை நோக்கி உள்ளதோ அந்த நபரிடம் ஒரு கேள்வி கேட்கப்படும்.
அவ்வாறு அக்ஷராவை நோக்கி முதலில் பாட்டில் விழுந்தபோது சிபி ஒரு கேள்வியை கேட்கிறார். ’போய் ரெண்டு அழுக்குத் துணியை துவைத்து விட்டு வா’ என்று கூற அதற்கு அக்ஷரா திமிராக ’முடியாது’ என்று கூறுகிறார்.
இதேபோல் அடுத்த முறை சுற்றும் போது பாட்டில் அபினவ்வை பார்த்து இருக்கிறது. அப்போது ராஜூ, பாவனியை லவ் பண்றியா? என்று கேட்க இந்த கேள்வியை சற்றும் எதிர்பாராத அபிநவ், ‘டேய் என்னடா கேள்வி கேட்கிறாய்? என்று கூறுவதுடன் இன்றைய அடுத்த புரமோ முடிவடைகிறது.
ராஜூ ஏன் அந்த கேள்வியை கேட்டார் என்பதை இன்றைய நிகழ்ச்சியை பார்த்து தெரிந்து கொள்வோம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com