ரஜினியின் உடல்நலம் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இளையதலைமுறை நடிகர்களுக்கு இணையாக ஒரே நேரத்தில் 'கபாலி' மற்றும் '2.0' ஆகிய இரண்டு படங்களில் சுறுசுறுப்பாக நடித்து வருகிறார். இரு படங்களின் படப்பிடிப்பு மற்றும் மேக்கப் டெஸ்ட் ஆகியவற்றுக்காக அடிக்கடி வெளிநாட்டு சுற்றுப்பயணமும் செய்து வருகிறார்.
இந்நிலையில் அவர் நேற்று மாலை சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றில் வழக்கமான பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டு ஒருசில பரிசோதனைகளுக்கு பின்னர் வீடு திரும்பினார். ஆனால் ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து பல்வேறு மாறுபட்ட செய்திகள் வந்து கொண்டிருப்பதாகவும், அந்த செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் ரஜினிகாந்த் பூரண உடல்நலத்துடன் இருப்பதாகவும் அவரது தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 'கபாலி' படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்ட ரஜினிகாந்த் இன்னும் ஒருசில நாட்களில் '2.0' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார். 'கபாலி' திரைப்படம் வரும் மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com