ஒரே நாளில் ரஜினி குடும்பத்திற்கு கிடைத்த 2 பெருமைகள்
- IndiaGlitz, [Monday,January 25 2016]
சூப்பர் ஸ்டார் ரஜினி குடும்பத்திற்கு என பல பெருமைகள் இருந்தாலும் அவருடைய குடும்பத்திற்கு இன்று மிகப்பெரிய ஒரு பொன்னான நாள் என்று கூறினால் அது மிகையாகாது.
இன்று இந்திய அரசின் மிகப்பெரிய விருதான பத்ம விபூஷன் விருது ரஜினிகாந்த் அவர்களுக்கு கிடைத்த பொன்னாள். அதேபோல் ரஜினியின் மருமகன் தனுஷுக்கு இந்திய திரையுலகினர் வெகு சிலருக்கே கிடைக்கும் ஹாலிவுட் பட வாய்ப்பு கிடைத்த நாள். அதுவும் கதாநாயகன் அந்தஸ்து உள்ள ஒரு ஹாலிவுட் படம் என்பதும் இந்த வாய்ப்பு இன்னும் ரஜினி உள்பட பெரும்பாலான நடிகர்களுக்கே கிடைக்காத பெருமை என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி ஒரே நாளில் ரஜினி குடும்பத்திற்கு இரண்டு மிகப்பெரிய பெருமை கிடைத்துள்ளதால் ரஜினி குடும்பத்தினர் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ரஜினியின் இரண்டு மகள்களான ஐஸ்வர்யா மற்றும் செளந்தர்யா ஆகியோர் தங்கள் சமூக வலைத்தளங்களில் ரஜினிக்கும், தனுஷுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.