வாழ்த்து கூறிய பிரபலங்களுக்கு தனது ஸ்டைலில் நன்றி கூறிய ரஜினி

  • IndiaGlitz, [Wednesday,December 12 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 69வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இன்று அதிகாலை 12 மணியில் இருந்து அவருக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

கமல்ஹாசன், அமிதாப்பச்சன், மு.க.ஸ்டாலின், ஷங்கர், மோகன்லால், திருநாவுக்கரசர், பொன்.ராதாகிருஷ்ணன், உள்பட பல பிரபலங்கள் ரஜினிக்கு டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்தனர்.

தன்னுடைய பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து வருகிறார் ரஜினிகாந்த். மு.க.ஸ்டாலினை தளபதி என்றும், என்றும் உங்கள் ரஜினி என்று கமல்ஹாசனுக்கும், நன்றி அமித்ஜி என அமிதாபுக்கும் என ரஜினி டுவீட் மூலம் நன்றி கூறியுள்ளார்,

குறிப்பாக பாஜக அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழ்க காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் ஆகிய எதிரெதிர் துருவங்கள் ரஜினிக்கு வாழ்த்து கூறியதும், இருவருக்கும் ரஜினி தனது ஸ்டைலில் நன்றி கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 



















More News

சர்கார் விவகாரம்: சென்னை ஐகோர்ட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் புதிய மனு

தளபதி விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படத்தில் அரசு வழங்கும் இலவச பொருட்கள் குறித்து சர்ச்சைக்குரிய காட்சி இருந்ததாக கூறி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

சேரனின் திருமணத்தை தொடங்கி வைத்த விஜய்சேதுபதி

இயக்குனர் சேரன் கடந்த சில ஆண்டுகளாக திரைப்படங்கள் இயக்காமல் இருந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் ஒரு புதிய படத்தை இயக்கப்போவதாக அறிவித்திருந்தார்.

பிரிட்டனில் தளபதி விஜய் பெற்ற விருது

கடந்த செப்டம்பர் மாதம் பிரிட்டனில் IARA விருது அறிவிக்கப்பட்டது என்பதும் இதில் தளபதி விஜய்க்கு சர்வதேச சிறந்த நடிகர் விருது கிடைத்தது என்பதும் தெரிந்ததே.

ரஜினி பிறந்த நாளில் கலக்கலான காரியத்தை செய்த கஸ்தூரி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 69வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் கோலிவுட் திரையுலகம் மட்டுமின்றி இந்திய திரையுலகமும், இந்திய அரசியல்வாதிகளும் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'பேட்ட' டீசர் விமர்சனம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சற்றுமுன் அவர் நடித்த 'பேட்ட' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ரஜினி நடிப்பில் கடந்த சில ஆண்டுகளாக