'அமரன்' வார்த்தைக்கு என்ன அர்த்தம்? 3 பேருக்கு நன்றி சொன்ன ராஜ்குமார் பெரியசாமி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தின் டைட்டில் ’அமரன்’ என்று நேற்று அறிவிக்கப்பட்டது என்பதும் நேற்று டைட்டில் உடன் வெளியான டீசர் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் ’அமரன்’ என்ற டைட்டிலில் கடந்த 1992 ஆம் ஆண்டு கார்த்திக் நடிப்பில் கே ராஜேஷ்வர் இயக்கத்தில் ஒரு திரைப்படம் வந்தது என்பது இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இந்த டைட்டில் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: ’அமரன்’ என்ற டைட்டில் வார்த்தை தான் நான் இந்த படத்தின் திரைக்கதைக்கு எழுதிய முதல் வார்த்தை. இந்த வார்த்தைக்கு அழியாதவர், போர் வீரன் மற்றும் தெய்வீகமானவர் என்று பொருள்.
எங்களுக்காக இந்த தலைப்பை கொடுக்க பெருந்தன்மையுடன் சம்மதித்த இயக்குனர் கே ராஜேஸ்வர் அவர்களுக்கு இந்த நேரத்தில் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல் இந்த படத்தில் நடித்த கார்த்திக் மற்றும் அவருடைய மகன் கௌதம் கார்த்திக் ஆகிய இருவரும் இந்த டைட்டில் கிடைக்க எனக்காக பரிந்துரை செய்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடிக்கும் இந்த படத்தில் ராகுல் போஸ், புவன் அரோகரா, ஸ்ரீகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கமல்ஹாசன் தயாரிப்பில் ஜிவி பிரகாஷ் இசையில் இந்த படம் உருவாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout