'அமரன்' என்ற சொல்லுக்கு என்ன பொருள்? இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி விளக்கம்.!
- IndiaGlitz, [Wednesday,October 30 2024]
சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்த அமரன் திரைப்படம் தீபாவளி அன்று வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. நாளை இந்த படத்தை பார்க்க சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இருக்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், ‘அமரன்’ என்ற சொல்லுக்கு என்ன பொருள் என்று இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி விளக்கினார். “அமரன்” என்பதற்கு “மரணம் இல்லாதவன்” என்று பொருள் என்றும், டெல்லியில் அமர் ஜவான் ஜோதி என்ற இடம் இருப்பதாகவும், மறைந்த ராணுவ வீரர்களின் நினைவாக அங்கு விளக்கு ஏற்றப்படும் என்றும், “அமர் ஜவான்” என்றால் “மறைந்த வீரன்” என்று பொருள் என்றும் கூறினார்.
இதுதான் சரியான டைட்டில் என்று எனக்குத் தோன்றிய பின்னர், கார்த்திக் நடித்த அமரன் என்ற படம் ஏற்கனவே உருவாகியிருப்பதை அறிந்து, தயாரிப்பாளர் சங்கத்தில் அந்த டைட்டிலை பேசி வாங்கினோம் என்றும் அவர் கூறினார்.
மேலும், படத்தின் ஸ்கிரிப்ட்டை எழுதி முடித்த பிறகு ராணுவ அதிகாரிகளிடம் அனுமதி பெற்றோம் என்றும், படத்தை முடித்த பின் டெல்லியில் ராணுவ அதிகாரிகளுக்கு திரையிட்டு காட்டினோம், அவர்கள் அனைவரும் படத்தைப் பாராட்டினார்கள் என்றும் தெரிவித்தார்.
தயாரிப்பாளர் கமல் அவர்கள் இந்த படத்தைப் பார்த்துவிட்டு என்ன சொன்னார் என்பது, படத்தின் ரிலீசுக்குப் பிறகு சொன்னால் நன்றாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.