ராஜ்குமார் பெரியசாமியின் அடுத்த படத்தில் மாஸ் நடிகர்.. இன்னொரு ரூ.200 கோடி வசூல் படமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
’அமரன்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியின் அடுத்த படத்தில் மாஸ் நடிகர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதை அடுத்து இன்னொரு 200 கோடி ரூபாய் வசூல் படம் தயாராக உள்ளதாக சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ’அமரன்’ திரைப்படம் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியான நிலையில், இந்த படம் ஒரு சில நாட்களில் 150 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்துள்ளது. இந்த படம் 200 கோடியை வசூலை தாண்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த படத்திற்கு அனைத்து தரப்பிலிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இந்த நிலையில் ராஜ்குமார் பெரியசாமியின் அடுத்த படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது. இயக்குனர் ராஜ்குமார் கூறிய கதை தனுஷ்க்கு பிடித்து விட்டதாகவும், விரைவில் இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணிபுரிய இருப்பதாக கூறப்படுகிறது. கோபுரம் பிலிம்ஸ் அன்பு செழியன் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
தனுஷ் தற்போது ’இட்லி கடை’ படத்தில் நடித்து இயக்கி வரும் நிலையில், இந்த படத்தின் வேலைகள் முடிந்ததும் அவர் ராஜ்குமார் பெரியசாமி படத்தில் இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments