பெற்ற தாயை கொலை செய்துவிட்டு நாடகமாடிய பேராசிரியர்: காட்டி கொடுத்த சிசிடிவி
Send us your feedback to audioarticles@vaarta.com
உடல்நிலை சரியில்லாத பெற்ற தாயை அவரது மகனே மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய சம்பவம் சிசிடிவி மூலம் தெரியவந்துள்ளது.
குஜராத் மாநிலத்தை சேர்ந்த ராஜ்கோட் பகுதியை சேர்ந்த சந்தீப் நத்வானி என்பவரது தாயார் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலமின்றி படுத்த படுக்கையாக இருந்துள்ளார். இந்த நிலையில் சந்தீப்பின் தாயார் திடீரென ஒருநாள் மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து விசாரணை செய்த போலீசார், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் சந்தீப், தனது தாயாரை வலுக்கட்டாயமாக மாடிக்கு அழைத்து சென்று கீழே தள்ளிவிட்ட காட்சியை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்
உடல்நலமில்லாத தாயாரை பராமரித்து கவனித்து கொள்வதில் சிரமம் இருந்ததால் தாயாரை கொலை செய்ய திட்டமிட்ட சந்தீப் அவரை மாடிப்படிகளில் வலுக்கட்டாயமாக அழைத்து சென்று மாடியில் இருந்து கீழே தள்ளி விட்டுள்ளார். பின்னர் தனது வீட்டிற்குள் சென்று கதவை தாழிட்டு கொண்டார். தாயார் கீழே விழுந்த தகவலை சற்று நேரத்தில் ஒருவர் சந்தீப்பிடம் தெரிவிக்க, ஒன்றுமே தெரியாதது போல அவர் கீழே ஓடுகிறார். இந்த காட்சிகள் அனைத்தும் சிசிடிவி காட்சியில் தெள்ளத்தெளிவாக இருப்பதால் அந்த ஆதாரத்தின் அடிப்படையில் போலீசார் சந்திப்பை கைது செய்தனர். இந்த கொலைக்கு சந்தீப்பின் மனைவியும் உடந்தையாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.
மாணவர்களுக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டிய ஒரு பேராசிரியரே, உடல்நலமில்லாத பெற்ற தாயை சுமையென நினைக்கும் கல்நெஞ்சு படைத்தவர்களும் உலகில் உள்ளனர் என்பதை நினைக்கும்போது மனிதம் அழிந்து வருவதாகவே கருதப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments