பெற்ற தாயை கொலை செய்துவிட்டு நாடகமாடிய பேராசிரியர்: காட்டி கொடுத்த சிசிடிவி

  • IndiaGlitz, [Friday,January 05 2018]

உடல்நிலை சரியில்லாத பெற்ற தாயை அவரது மகனே மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய சம்பவம் சிசிடிவி மூலம் தெரியவந்துள்ளது.

குஜராத் மாநிலத்தை சேர்ந்த ராஜ்கோட் பகுதியை சேர்ந்த சந்தீப் நத்வானி என்பவரது தாயார் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலமின்றி படுத்த படுக்கையாக இருந்துள்ளார். இந்த நிலையில் சந்தீப்பின் தாயார் திடீரென ஒருநாள் மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து விசாரணை செய்த போலீசார், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் சந்தீப், தனது தாயாரை வலுக்கட்டாயமாக மாடிக்கு அழைத்து சென்று கீழே தள்ளிவிட்ட காட்சியை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்

உடல்நலமில்லாத தாயாரை பராமரித்து கவனித்து கொள்வதில் சிரமம் இருந்ததால் தாயாரை கொலை செய்ய திட்டமிட்ட சந்தீப் அவரை மாடிப்படிகளில் வலுக்கட்டாயமாக அழைத்து சென்று மாடியில் இருந்து கீழே தள்ளி விட்டுள்ளார். பின்னர் தனது வீட்டிற்குள் சென்று கதவை தாழிட்டு கொண்டார். தாயார் கீழே விழுந்த தகவலை சற்று நேரத்தில் ஒருவர் சந்தீப்பிடம் தெரிவிக்க, ஒன்றுமே தெரியாதது போல அவர் கீழே ஓடுகிறார். இந்த காட்சிகள் அனைத்தும் சிசிடிவி காட்சியில் தெள்ளத்தெளிவாக இருப்பதால் அந்த ஆதாரத்தின் அடிப்படையில் போலீசார் சந்திப்பை கைது செய்தனர். இந்த கொலைக்கு சந்தீப்பின் மனைவியும் உடந்தையாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.

மாணவர்களுக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டிய ஒரு பேராசிரியரே, உடல்நலமில்லாத பெற்ற தாயை சுமையென நினைக்கும் கல்நெஞ்சு படைத்தவர்களும் உலகில் உள்ளனர் என்பதை நினைக்கும்போது மனிதம் அழிந்து வருவதாகவே கருதப்படுகிறது.

More News

மலேசியன் பிரதமருடன் ரஜினி சந்திப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மலேசியாவில் நாளை நடைபெறும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நட்சத்திர விழாவில் கலந்து கொள்ள மலேசியா சென்றுள்ளார். அவருக்கு மலேசியாவில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

வேலைநிறுத்தத்தால் பொதுமக்கள் பாதிப்பு: பேருந்தை இயக்கி அசத்திய அந்தியூர் எம்.எல்.ஏ

தமிழகத்தில் நேற்று மாலை முதல் போக்குவரத்து ஊழியர்கள் திடீரென முன்னறிவிப்பு இன்றி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் பொதுமக்கள் பெரும் அவதியில் உள்ளனர்.

இது சட்டத்திற்கு புறம்பானது: ரஜினிக்கு பீட்டா அமைப்பு கடிதம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது அரசியல் வருகை குறித்த அறிவிப்பை வெளியிட்டதில் இருந்தே அவரது ரசிகர்கள் இதனை ஒரு கொண்டாட்டமாக கொண்டாடி வருகின்றனர்.

ஊதியம் திருப்தி இல்லை என்றால் வேறு வேலை பாருங்கள்! பஸ் ஊழியர்களுக்கு நீதிபதி எச்சரிக்கை

போக்குவரத்து ஊழியர்கள் ஊதியம் திருப்தியாக இல்லை என்று கருதினால் வேறு வேலை பார்த்து கொள்ளவும் என்று கூறிய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி

'சொடக்கு' பாடலுக்கு தடை கோரி அதிமுக நிர்வாகி புகார்!

சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தின் பாடல்கள் நேற்று வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள சூப்பர் ஹிட் பாடலான 'சொடக்கு மேல சொடக்கு போட்டு