ஏதோ உள்நோக்கம் உள்ளது. கந்தசஷ்டி கவசம் விவகாரம் குறித்து நடிகர் ராஜ்கிரண்
Send us your feedback to audioarticles@vaarta.com
கந்தசஷ்டி கவசம் குறித்து அருவருப்பாக விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்ட நபருக்கு கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில் பல திரையுலக பிரபலங்கள் இதுகுறித்து தங்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ராஜ்கிரண் இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:
"கந்தர் சஷ்டி கவசம்".
ஒவ்வொரு மனிதனுக்கும்,
எந்த வகையிலேனும்,
தனக்கு பாதுகாப்பு தேடிக்கொள்ள
உரிமை இருக்கிறது.
அது, அவனது சுதந்திரம்.
முருகப்பெருமானை நம்புவோர்க்கு,
"கந்தர் சஷ்டி கவசம்" என்பது,
"ஒரு பாதுகாப்பு அரண்".
இதை ஆழ்ந்து படித்தால்,
அறிவியல்பூர்வமான,
மனோதத்துவரீதியான
ஆத்ம பலன்கள் இருக்கின்றன...
இறைவனை நம்பாதோர்க்கு,
"நம்பாமை" என்பது,
அவர்களின் சுதந்திரம்.
நம்பிக்கை கொண்டோர்க்கு,
"நம்புதல்" என்பது,
அவர்களின் சுதந்திரம்.
இதில், அவரவர் எல்லையோடு
அவரவர்கள் நின்று கொள்வது தான்,
மேன்மையானது.
தேவையில்லாமல் மற்றவர் எல்லைக்குள்
புகுந்து, விமர்சனம் செய்வதென்பது,
மிகவும் கீழ்மையானது...
இந்த கொடிய கொரோனா காலகட்டத்தில்,
நோயோடும், நோய் பயத்தோடும்,
பொருளாதார சீர்கேட்டோடும்,
உண்ண உணவின்றி
கோடிக்கணக்கான நம் மக்கள்
தவித்துக்கொண்டிருக்கும் சூழலில்,
இப்படி ஒரு பிரச்சினைக்கு தீ மூட்டுவதில்,
யாருக்கோ, ஏதோ, உள் நோக்கம்
இருப்பதாகவே நினைக்கத்தோன்றுகிறது..
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout