30 ஆண்டுகள் கழித்து உருவாகும் இரண்டாம் பாக திரைப்படம்: ராஜ்கிரண் அறிவிப்பு

  • IndiaGlitz, [Friday,April 16 2021]

நடிகர் ராஜ்கிரண் நடிப்பில் இயக்குனர் கஸ்தூரி ராஜா இயக்கிய ’என் ராசாவின் மனசிலே’ என்ற திரைப்படம் 1991 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் 30 ஆண்டுகள் கழித்து உருவாக இருப்பதாக ராஜ்கிரண் ஏற்கனவே அறிவித்திருந்தார்

இந்த படத்தை அவரது மகன் நைனார் முஹம்மது என்பவர் இயக்கவிருக்கிறார் என்பதும் அவருக்கு வெறும் 20 வயது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ’என் ராசாவின் மனசிலே’ படம் ரிலீசாகி 30 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து தனது பேஸ்புக் பக்கத்தில் இதுகுறித்த அறிவிப்பு ஒன்றை ராஜ்கிரண் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

இறை அருளால்,
என் ராசாவின் மனசிலே
30 ஆண்டுகள் நிறைவுற்றது...
என் ராசாவின் மனசிலே
இரண்டாம் பாகத்தை,
என் மகன் நைனார் முஹம்மது
எழுதி, இயக்குகிறார்.
கதையை எழுதி முடித்து விட்டு,
திரைக்கதை எழுதுவதில்
தீவிரமாக உழைத்துக்கொண்டிருக்கிறார்.
வெகு விரைவில் படப்பிடிப்பை தொடங்க
திட்டமிட்டிருக்கிறார்.
இறை அருளால், இப்படமும் மாபெரும்
வெற்றியடைய,
உங்கள் பிரார்த்தனைகளையும்,
வாழ்த்துகளையும் வேண்டுகிறேன்...

More News

பவுண்டரி லைனை பேட்டால் அடித்த விராட் கோலி… இணையத்தில் வெடிக்கும் சர்ச்சை!

2021 ஐபிஎல் போட்டியை ஒட்டி ஏப்ரல் 14 ஆம் தேதி பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் ஹைத்ராபாத் அணியும் மோதிக் கொண்டன.

டெல்லி அணியில் இடம்பிடித்த இளம் சிங்கம்… யார் இந்த லலித் யாதவ்?

டெல்லி கேபிடள்ஸ் அணியில் அமித் மிஸ்ரா போன்ற மூத்த வீரர்கள் இருக்கும்போது அறிமுகப் போட்டியிலேயே இளம் வீரரான லலித் யாதவ் களம் இறங்கப்பட்டு இருக்கிறார்.

ஷங்கர்-ஆஸ்கார் ரவிச்சந்திரன் பிரச்சனை: 'அந்நியன்' படத்தின் உதவி இயக்குனரின் டுவீட்!

ஷங்கர் இயக்கிய 'அந்நியன்' திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் குறித்த பிரச்சனை நேற்று முதல் நடந்து வருகிறது என்பதை பார்த்தோம். இந்த படத்தின் ரீமேக்கை தன்னுடைய அனுமதி இல்லாமல் எடுக்கக் கூடாது

என்னுடைய இதயத்தை வென்றவர்கள்: கீர்த்திசுரேஷின் வீடியோ வைரல்!

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15ம் தேதி உலக கலை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது என்பதும் இந்த தினத்தில் உலகிலுள்ள ஓவிய கலைஞர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இருந்து வருகிறது என்பதும் தெரிந்ததே

ஒரே படுக்கையில் இரண்டு கொரோனா நோயாளிகள்: டெல்லி மருத்துவமனையின் அவலம்!

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களாக மிக வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் தினமும் ஆயிரக்கணக்கானோர்