பொறுமையை தவறாக புரிந்து கொண்டால் விளைவுகள் மோசமாக இருக்கும்: ராஜ்கிரணின் ஃபேஸ்புக் பதிவு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பொறுமையை தவறாக புரிந்து கொண்டால் விளைவுகள் மோசமாக இருக்கும் என நடிகர் ராஜ்கிரண் தனது ஃபேஸ்புக்கில் ஆவேசமாக பதிவு செய்துள்ளார். அவர் இந்த பதிவில் கூறியிருப்பதாவது:
இஸ்லாமியர்களுக்கு, எவ்வளவு
அநீதிகள் இழைக்கப்பட்டாலும்,
எவ்வளவு வன்மத்தோடு அக்கிரமங்களுக்கு ஆட்படுத்தப்பட்டாலும்,
அவர்கள் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு,
தங்களால் முடிந்த உதவிகளை
பிற சமுதாயத்தினருக்கும்
செய்து கொண்டு, அமைதியாக
வாழ்ந்து கொண்டிருப்பதற்கு காரணம்,
இயலாமையோ, கோழைத்தனமோ,
அல்லது உயிருக்கு பயந்தோ அல்ல...
"இறப்பதற்காகவே பிறந்திருக்கிறோம்.
இறை வழியில் மரணத்தை நேசிக்கிறோம், என்ற கொள்கையினால்",
பொறுமை காக்க வேண்டும் என்று,
இறைவனின் இறுதி தூதுவர்,
இஸ்லாமிய மக்களின் மாபெரும் தலைவர், நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கையையும், வார்த்தைகளையும்
பின்பற்றுவதால்,
பொறுமையைவிட சிறந்த பொக்கிஷம் இல்லை என்று, பொறுமை காக்கிறோம்...
இந்தப்பொறுமையை,
தவறாகப்புரிந்து கொண்டு, கண்ட
கழிசடைகளும் பேச ஆரம்பித்தால்,
அதன் விளைவு மிக மோசமாயிருக்கும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments