'என் ராசாவின் மனசில 2': 20 வயதில் இயக்குனராகும் பிரபல நடிகரின் மகன்!

  • IndiaGlitz, [Monday,February 01 2021]

நடிகர் ராஜ்கிரண் நடிப்பில் இயக்குனர் கஸ்தூரி ராஜா இயக்கிய ’என் ராசாவின் மனசிலே’ என்ற திரைப்படம் கடந்த 1991ஆம் ஆண்டு வெளியானது. இசைஞானி இளையராஜா இசையமைத்து இருந்த இந்த படத்தில் மீனா நாயகியாக நடித்து இருப்பார் என்பதும் வைகைப்புயல் வடிவேலு இந்த படத்தின் மூலம்தான் திரையுலகில் அறிமுகமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது 30 வருடம் கழித்து இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது

இந்த திரைப்படத்தை முதல் பாகத்தில் ஹீரோவாக நடித்த ராஜ்கிரண் மகன் திப்புசுல்தான் நைனார் முகமது என்பவர் இயக்கவிருக்கிறார். இவர் இயக்கும் முதல் படம் இதுதான் என்பது இவருக்கு இன்று 20 ஆவது பிறந்த நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது

இதுகுறித்து ராஜ்கிரண் கூறியிருப்பதாவது: இறை அருளால், இன்று, என் மகனார் திப்பு சுல்தான் நைனார் முஹம்மதுவின் இருபதாவது பிறந்த நாள். என் ராசாவின் மனசிலே இரண்டாம் பாகத்துக்கான கதையை எழுதி முடித்துவிட்டு, திரைக்கதையை எழுதிக்கொண்டிருக்கிறார். அவரே இந்தப் படத்தை இயக்கவும் உள்ளார். அவர் மிகப்பெரும் வெற்றிப்பட இயக்குனராக, உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளையும், வாழ்த்துகளையும் வேண்டுகிறேன்.

More News

14 வருடம் கழித்து தமிழக கிரிக்கெட் அணி வெற்றிக் கோப்பை! தளபதி பாடலுக்கு நடனம்!

செய்யது முஸ்டாக் அலி கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி கடந்த 14 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக கோப்பையை கைப்பற்றி இருக்கிறது.

2021-2022 பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்… சிறப்பு கவனம் எந்த துறைக்கு?

உலகப் பொருளாதாரத்தில் நிலையற்ற தன்மை நிலவுகிறது எனக் குறிப்பிட்ட நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.

சென்னை மெட்ரோவுக்கு ரூ.63ஆயிரம் கோடி: மத்திய பட்ஜெட் 2021ன் முக்கிய அம்சங்கள்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பாராளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் நிலையில் இந்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் குறித்து தற்போது பார்ப்போம்

ஆளும் பாஜகவின் 9 ஆவது மத்திய பட்ஜெட்! நிலவரம் என்ன?

நடப்பு 2021-22 நிதி ஆண்டுக்காக மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

'தளபதி 65' படத்திலும் தொடரும் காமெடி காம்போ!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் பொங்கல் திருநாளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படம் இரண்டே வாரங்களில் 200 கோடி வசூல் செய்ததை அடுத்து தற்போது