70 வயதில் கபடி களத்தில் இறங்கும் ராஜ்கிரண்: 'பட்டத்து அரசன்' டிரைலர்
Send us your feedback to audioarticles@vaarta.com
70 வயது கபடி வீரராக நடிகர் ராஜ்கிரண் நடித்துள்ள பட்டத்து இளவரசன் என்ற திரைப்படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகிய இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அதர்வா, ராஜ்கிரண் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’பட்டத்து அரசன்’.இந்த படத்தில் ஆஷிகா ரங்கநாத், ராதிகா சரத்குமார், பால சரவணன், ஆர்கே சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சற்குணம் இயக்கத்தில் ஜிப்ரான் இசையில் உருவாகி இந்த படத்திற்கு லோகநாதன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவும், முகமது ராஜா படத்தொகுப்பும் செய்துள்ளனர்.
இந்த படத்தின் டிரைலரில் உள்ள அதிரடி ஆக்ஷன் காட்சிகள் மற்றும் குடும்ப சென்டிமென்ட் காட்சிகள் படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது. குறிப்பாக 70 வயது கேரக்டரில் நடித்துள்ள ராஜ்கிரண் கபடி களத்தில் இறங்கும் ஆவேசமான காட்சி நிச்சயம் திரையரங்கில் கைதட்டல் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த படத்தின் வசனங்களும் மிகவும் சிறப்பாக உள்ளன. குறிப்பாக, ’உனக்கு எனக்கும் குடும்பம் என்கிறதே இல்லை, உனக்கு நான் எனக்கு நீ’
’ஆடு பகை இருக்கும்போது குட்டி மட்டும் எப்படி உறவாக முடியும், அதுவும் பகையா தான் இருக்கும்’
’எங்க குடும்பம் ஒரு பக்கம், ஊரே இன்னொரு பக்கம் மோதி பார்ப்போமா?
ஆகிய வசனங்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் நவம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Presenting the official trailer of #PattathuArasan ??
— Lyca Productions (@LycaProductions) November 18, 2022
▶️ https://t.co/wsYWTkpTFN
Witness the story of Pothaari & his family at the cinemas ??️@SarkunamDir ?? @Atharvaamurali #Rajkiran @AshikaRanganath @realradikaa ✨ @GhibranOfficial ?? @thinkmusicindia ?? @LycaProductions ?? pic.twitter.com/siJyhoYGdo
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments