ரூ.10 கோடி விவகாரம்: ஞானவேல்ராஜாவுக்கு கமல்ஹாசன் பதில்!
Send us your feedback to audioarticles@vaarta.com
‘உத்தம வில்லன்’ திரைப்படம் வெளியாகும்போது ஏற்பட்ட பொருளாதார சிக்கலை சரிசெய்ய கமல்ஹாசன் தன்னிடம் ரூ.10 கோடி பெற்றதாகவும், அதற்காக தனது நிறுவனத்திற்காக ஒரு படத்தில் நடித்து தருவதாக கமல் கூறியதாகவும், ஆனால் இதுவரை அவர் படம் நடித்தும் தரவில்லை பணத்தையும் திருப்பி தரவில்லை என்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இதுகுறித்து கமல்ஹாசனின் ராஜ்கமல்பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறியதாவது:
உத்தம வில்லன்’ திரைப்படம் வெளியாகும்போது ஏற்பட்ட பொருளாதார சிக்கலை சரிசெய்ய ஞானவேல்ராஜா ரூ.10 கோடி கொடுத்ததை ராஜ்கமல் நிறுவனம் மறுத்துள்ளதோடு இது உண்மைக்கு புறமான வதந்தி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஞானவேல்ராஜா அவர்கள் கமல்ஹாசனுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை என்றும், கடந்த சில நாட்களுக்கு முன் தயாரிப்பாளர் சங்கத்தின் உறுப்பினர் சதீஷ்குமார் தங்கள் அலுவலகத்தை தொடர்பு கொண்டு கடந்த 2015ல் ராஜ்கமல் நிறுவனம் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்கு அனுப்பிய கடிதம் குறித்து பேச வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
2015ஆம் ஆண்டு திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துடன் கதை ஒன்று குறித்து ஆலோசனை செய்ய கமல்ஹாசன் அவர்களின் தேதிகளை ராஜ்கமல் நிறுவனம் அளித்திருந்தது. ஆனால் அதுகுறித்து திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் இன்றுவரை எங்களுடன் தொடர்பு கொள்ளவில்லை. உத்தம வில்லன்’ திரைப்படத்தை தயாரிக்க ராஜ்கமல், திருப்பதி பிரதர்ஸ் நிறுவனஙகள் மட்டுமே ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த ஒப்பந்தத்தில் அடிப்படையில் ராஜ்கமல் நிறுவனம் உத்தம வில்லன் படத்தின் முதல் பதிவை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைத்துவிட்டது. ஞானவேல்ராஜாவுக்கும் கமல்ஹாசனுக்கும் எந்தவித ஒப்பந்தமும் கிடையாது. எனவே இந்த படத்தின் ரீலீசின்போது ஞானவேல்ராஜா, கமல்ஹாசனுக்கு பணம் கொடுத்தார் என்று கூறுவதில் எந்தவித முகாந்திரமும் இல்லை. கமல்ஹாசன் மதிப்பை கெடுக்கவே இந்த வதந்தி பரப்பப்படுகிறது. இதுகுறித்து ராஜ்கமல் நிறுவனம் சட்டநடவடிக்கை எடுக்க தயாராகி வருகிறது. இவ்வாறு ராஜ்கமல் நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments