அடுத்த லெவலுக்கு சென்றது 'தக்லைஃப்' திரைப்படம்.. ராஜ்கமல் பிலிம்ஸ் வெளியிட்ட வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தக்லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்த லெவல் பணியான டப்பிங் பணிகளை கமல்ஹாசன் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த வீடியோவையும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளது.
முதல் கட்டமாக கமல்ஹாசன் இதுவரை தான் நடித்த காட்சிகளுக்கு டப்பிங் குரல் கொடுக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளன. இதை அடுத்து சிம்பு உட்பட மற்ற நடிகர்களும் விரைவில் டப்பிங் குரல் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ‘தக்லைஃப்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு அயர்லாந்து நாட்டில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்ததாகவும் ஆனால் சில பிரச்சினைகள் காரணமாக தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பை கோவாவில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் விரைவில் கமல்ஹாசன், மணிரத்னம் உள்பட படக்குழுவினர் கோவா செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கோவாவில் கமல்ஹாசன், சிம்பு உள்பட பலரது காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாகவும் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் இந்த படத்தின் படப்பிடிப்பை முடிக்க மணிரத்னம் திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா, அபிராமி, நாசர், அலி ஃபைசல், பங்கஜ் திரிபாதி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, வையாபுரி உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன.
When #Ulaganayagan voices it, the World listens!#ThugsDubbingBegins #VoiceofThugs#KamalHaasan #ThugLife #SilambarasanTR@ikamalhaasan #ManiRatnam @SilambarasanTR_ @arrahman #Mahendran @bagapath pic.twitter.com/6acx8X82Fl
— Raaj Kamal Films International (@RKFI) July 29, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com