'எஸ்.கே.21’ படத்தின் மாஸ் அறிவிப்பை வெளியிட்ட ராஜ்கமல்.. இன்று ஒரு செம்ம விருந்து..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிவகார்த்திகேயன் நடிப்பில், உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’எஸ் கே 21’. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜம்மு காஷ்மீர் உள்பட பல பகுதிகளில் நடந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வரும் 17ஆம் தேதி சிவகார்த்திகேயன் பிறந்தநாள் என்பதால் அன்றைய தினம் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய பஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்ப அதிர்ச்சியாக இன்றே இது குறித்து அறிவிப்பை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் சமூக வலைதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியான வீடியோவில் இன்று மாலை ஐந்து மணிக்கு இந்த படம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு இன்று மாலை ஒரு செம்ம விருந்து காத்திருக்கிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடித்து வரும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார் என்பதும் இந்த படம் இன்னும் ஒரு சில மாதங்களில் ரிலீஸ் ஆக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
A Journey of Sweat & Triumph unravels at 5pm Today!#HeartsonFire#Ulaganayagan #KamalHaasan #Sivakarthikeyan #SK21@ikamalhaasan @Siva_Kartikeyan #Mahendran @Rajkumar_KP @gvprakash @Sai_Pallavi92 @RKFI @ladasingh @SonyPicsIndia @sonypicsfilmsin @turmericmediaTM @khanwacky… pic.twitter.com/747WDNasM3
— Raaj Kamal Films International (@RKFI) February 12, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Bala Vignesh
Contact at support@indiaglitz.com