கமல்-எச்.வினோத் படம் டிராப்.. மறைமுகமாக அறிவித்த ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவாக இருந்த திரைப்படம் காலதாமதம் ஆனதாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது கிட்டத்தட்ட அந்த படம் டிராப் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது.
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் அடுத்தடுத்த படங்கள் குறித்து அந்நிறுவனத்தின் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் ’தக்லைப்’ கமல்ஹாசனின் 237 வது படம், சிவகார்த்திகேயனின் 21-வது படம் மற்றும் சிம்புவின் 48வது படம் என நான்கு படங்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் கமல்ஹாசனின் 237 வது படம் என்பது ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் இயக்கும் படம் என்று சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
எனவே ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பட்டியலில் எச் வினோத் படம் குறித்த அறிவிப்பு இல்லை என்பதால் அந்த படம் ட்ராப் என்பதை மறைமுகமாக ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தெரிவித்துள்ளதாகவே கருதப்படுகிறது. ஒருவேளை கமல்ஹாசனை வைத்து எச் வினோத் பின்னாளில் படம் இயக்கலாம் என்றாலும் இப்போதைக்கு அந்த படம் இல்லை என்பது தான் தெரிய வருகிறது
இந்த நிலையில் எச் வினோத் அடுத்ததாக யோகி பாபு நடிக்கும் படம் ஒன்றை இயக்க இருப்பதாகவும் இதனை அடுத்து ’தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இருப்பதாகவும், தனுஷ் நடிப்பிலும் எச் வினோத் ஒரு திரைப்படத்தை இயக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Rest is Action #Ulaganayagan #KamalHaasan#ThugLife #KH237 #SK21 #STR48
— Raaj Kamal Films International (@RKFI) January 24, 2024
@ikamalhaasan @Siva_Kartikeyan @SilambarasanTR_#Maniratnam #Mahendran @anbariv @Rajkumar_KP @desingh_dp@turmericmediaTM @magizhmandram pic.twitter.com/G681xU6xsK
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments