கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் எச்சரிக்கை அறிவிப்பு.. என்ன நடந்தது?
Send us your feedback to audioarticles@vaarta.com
உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல நிறுவனங்கள் தயாரிக்கும் திரைப்படங்களில் நடிப்பதற்கு ஆட்கள் தேவை என்று அவ்வப்போது சமூக வலைதளங்களில் விளம்பரம் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த விளம்பரங்களில் சில போலியாக தரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்பு கூட லைக்கா நிறுவனம் தங்களுடைய நிறுவனத்தின் பெயரில் போலி விளம்பரங்கள் வெளியாகி கொண்டிருகின்ற என்ற குற்றம் சாட்டியது. இந்த நிலையில் தற்போது கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் இதே போன்ற குற்றச்சாட்டை கூறி மோசடி செய்பவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களுக்காக எந்த ஒரு காஸ்டிங் ஏஜென்ட்களையும் நாங்கள் நியமிக்கவில்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.
நாங்கள் தயாரிக்கும் திரைப்படங்களில் வாய்ப்பு வாங்கி தருவதாக வரும் செய்திகளை எவ்வகையில் உங்களை வந்தடைந்தாலும் அதை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
எங்களது ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பெயரை அனுமதியின்றி பயன்படுத்தி மோசடியில் ஈடுபவர்கள் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதன் மூலம் எச்சரிக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளது.
— Raaj Kamal Films International (@RKFI) September 9, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout