சிவகார்த்திகேயனின் 'அமரன்' டிரைலர் எப்போது.. ராஜ்கமல் நிறுவனம் அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன் இசை வெளியீட்டு விழா நடந்த நிலையில், இந்த விழாவில் வெளியான பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகியிருக்கிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் அடுத்த கட்டமாக ‘அமரன்’ படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதியை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளது. ‘அமரன்’ திரைப்படத்தின் டிரைலர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிரைலரை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்
சிவகார்த்திகேயன், சாய்பல்லவி, புவன் அரோரா, ராகுல் போஸ், ஸ்ரீகுமார் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார். ஜிவி பிரகாஷ் இசையில் சாய் ஒளிப்பதிவில் கலைவாணன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.
A Hero's Legacy comes to Life! #Amaran trailer marches tomorrow at 6 Pm. #Amarantrailer#Amaran#AmaranDiwali #AmaranOctober31#Ulaganayagan #KamalHaasan #Sivakarthikeyan #SaiPallavi #RajkumarPeriasamy
— Raaj Kamal Films International (@RKFI) October 22, 2024
A Film By @Rajkumar_KP @ikamalhaasan @Siva_Kartikeyan #Mahendran… pic.twitter.com/a2ogwTR6y8
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com