கவுதமியின் சம்பள பாக்கி குற்றச்சாட்டுக்கு ராஜ்கமல் நிறுவனம் விளக்கம்

  • IndiaGlitz, [Monday,February 26 2018]

நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் தனது அரசியல் கட்சியை தொடங்கியுள்ள நிலையில் அவருடன் 13 வருடங்கள் இணைந்து வாழ்ந்த நடிகை கவுதமி, திடீரென கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கமல்ஹாசன் நடித்த 'விஸ்வரூபம்' மற்றும் 'தசாவதாரம்' ஆகிய படங்களில் தான் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியதற்கு ராஜ்கமல் நிறுவனம் தனக்கு சம்பள பாக்கி வைத்துள்ளது என்று குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார்.

ஊழலை ஒழிப்பதே தனது முக்கிய நோக்கம் என்ற அறிவிப்புடன் கமல் கட்சி தொடங்கிய நிலையில் அவர் மீதே சம்பள பாக்கி குற்றச்சாட்டை கவுதமி சுமத்தியது சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கவுதமியின் சம்பள பாக்கி குறித்த குற்றசாட்டுக்கு ராஜ்கமல் நிறுவனம் தற்போது விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து ராஜ்கமல் நிறுவனம் கூறியதாவ்து:

தசாவதாரம்' படத் தயாரிப்பாளர், ஆஸ்கர் ரவிச்சந்திரன்; 'விஸ்வரூபம்' படத் தயாரிப்பு பி.வி.பி சினிமாஸ் நிறுவனத்தார். இந்தப் படங்களில் கவுதமிக்கு சம்பளப் பிரச்னை இருந்தால், அதற்கு ராஜ்கமல் பிலிம்ஸ் எந்தவிதத்தில் பொறுப்பேற்க முடியும்?

திரைத்துறையைப் பொருத்தவரை, ஒரு படத்தில் வேலை செய்யக்கூடிய நடிகர்களில் ஆரம்பித்து டெக்னீஷியன்கள் வரை அனைவரிடமும், சம்பளம், முன்பணம் போன்ற விபரங்களைத் தெளிவாக ஒப்பந்தம் போட்டுத்தான் வேலையை ஆரம்பிப்பார்கள். அந்தவகையில் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட படங்களில், காஸ்ட்யூம் டிசைனராகக் கவுதமி பணியாற்றியதற்கான சம்பளத் தொகை அனைத்தும் கொடுக்கப்பட்டுவிட்டது.

மாறாக, ராஜ்கமல் நிறுவனம் பணம் தரவேண்டியிருப்பதற்கான ஆதாரங்களைக் கவுதமி கொடுப்பாரேயானால், நிச்சயம் நாங்கள் பணம் தரத் தயாராகவே இருக்கிறோம். கமல்ஹாசன் புதிதாக அரசியல் கட்சி தொடங்கி வழி நடத்திவரும் இவ்வேளையில், இப்படியொரு பிரச்னையை கவுதமி எழுப்பியிருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது'' என்று ராஜ்கமல் நிறுவனம் கூறியுள்ளது.

More News

தமிழர்களுக்கு பெருமை தரும் வகையில் அஸ்வினுக்கு கிடைத்த புதிய பதவி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் வரும் ஏப்ரல் மாதம் முதல் நடைபெறவுள்ள நிலையில் இந்த போட்டிக்கான வீரர்கள் ஏலம் சமீபத்தில் பெங்களூரில் நடைபெற்றது.

சிரியா படுகொலையை உச்சு கொட்டுவதால் என்ன பயன்? நடிகர் பிரசன்னாவின் ஆவேச பதிவு

சிரியாவில் கடந்த ஒரு வாரத்தில் நடந்த தாக்குதலில் மட்டும் சுமார் 500 பேர் கொல்லப்பட்டதாகவும், அவர்களில் பெரும்பாலும் குழந்தைகள் என்றும் ஊடகங்களில் தலைப்பு செய்தியாக வந்து கொண்டிருக்கின்றது.

ஸ்ரீதேவியின் உடலில் ஆல்கஹால் இருந்ததா? பிரேத பரிசோதனை அறிக்கை கூறுவது என்ன?

பிரபல நடிகை ஸ்ரீதேவி எதிர்பாராதவிதமாக மாரடைப்பு ஏற்பட்டு துபாயில் மரணம் அடைந்த நிலையில் அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் கடந்த சில மணி நேரங்களாக நடைபெற்று வருகிறது.

கமல் கட்சியின் கொடி திடீர் மாற்றமா?

சமீபத்தில் 'மக்கள் நீதி மய்யம்' என்ற கட்சியை ஆரம்பித்த கமல் அறிமுகம் செய்த கட்சியின் கொடி தமிழர் பாசறை கொடியில் உள்ள சின்னத்தை போன்று இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

விஷாலுக்கு கலிபோர்னியாவில் நடக்கும் சிகிச்சை என்ன?

நடிகர் சங்க செயலாளர், தயாரிப்பாளர் சங்க தலைவர் மற்றும் நடிப்பு பணிகள் காரணமாக பிசியாக இருந்த நடிகர் விஷால், சில நாட்கள் ஓய்வுக்கு செல்வதாகவும்,