சிம்புவின் 'எஸ்.டி.ஆர். 48' படத்தை கைவிட்டதா ராஜ்கமல்? தனுஷ் பட தயாரிப்பாளரிடம் பேச்சுவார்த்தை?

  • IndiaGlitz, [Sunday,July 07 2024]

சிம்பு நடிப்பில், கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட திரைப்படம் ‘எஸ்.டி.ஆர். 48’. இந்த படத்திற்காக கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆரம்பகட்ட பணிகள் நடந்ததாகவும், இந்த படத்தின் கேரக்டருக்காக சிம்பு ஒரு வருடம் தன்னை தயார் செய்து கொண்டதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் ‘எஸ்.டி.ஆர். 48’ படத்தை தயாரிக்கவில்லை என்றும் அந்த படத்தில் இருந்து விலகிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து தற்போது இந்த படத்தை தயாரிக்க கனெக்ட் மீடியா & பிகே பிரைம் புரடொக்சன்ஸ் என்ற நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனம் ஏற்கனவே தனுஷின் ’இளையராஜா’ பயோபிக் திரைப்படத்தை தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

‘எஸ்.டி.ஆர். 48’ படத்தின் பட்ஜெட் மிக அதிகமாக இருப்பதாகவும் தற்போதைய சூழ்நிலையில் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் பிசினஸ் மிகவும் குறைவாக இருப்பதால் இந்த படத்தை தயாரிப்பதிலிருந்து ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் விலகி விட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த எந்தவிதமான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தவெக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ் திரைப்பட ஹீரோ.. விஜய் கட்சியில் இணைகிறாரா?

சமீபத்தில் சென்னையில் நடந்த தமிழக வெற்றி கழகத்தின் நிகழ்ச்சியில் தமிழ் திரைப்பட ஹீரோ கலந்து கொண்டதை அடுத்து அவர் விஜய் கட்சியில் இணைகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

புக் படிக்க வேற இடமே இல்லையா? பிகினியில் நீச்சல் குளத்தில் சின்சியராக படிக்கும் நடிகை..!

தமிழ் நடிகை ஒருவர் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் சின்சியராக புத்தகம் படிக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் புக் படிக்க வேறு இடமே இல்லையா என நெட்டிசன்கள் கமெண்ட்களை பதிவு செய்து

மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்ட நடிகையின் உடம்பில் இத்தனை தழும்புகளா? அதிர்ச்சி புகைப்படங்கள்..!

மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகையின் உடம்பில் இருக்கும் தழும்புகள் குறித்த புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட நிலையில் அந்த புகைப்படங்களை

தனுஷின் 'ராயன்' ரன்னிங் டைம் இவ்வளவு தானா? இசை வெளியிட்டு விழாவின் ஹைலைட்ஸ்..

தனுஷ் நடித்த 'ராயன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில் இந்த இசை வெளியிட்டு விழாவில் இந்த படத்தின் ரன்னிங் டைம்

'வேட்டையன்' படத்தின் முக்கிய பணி ஆரம்பம்.. ரஜினியை முந்திய பகத் பாசில்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்' திரைப்படத்தின் முக்கிய பணி இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில் இந்த பணியில் பகத் பாசில் கலந்து கொண்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.