திடீரென மருத்துவ விடுப்பில் சென்றாரா ராஜீவ்காந்தி மருத்துவமனை டீன்? அதிர்ச்சி தகவல் 

சென்னையில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் மிக வேகமாக பரவி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளதால், சென்னை மக்களுக்கு பெரும் கவலை தருவதாக உள்ளது. நேற்று மட்டும் சென்னையில் 1989 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னையில் பொதுமக்களுக்கு மட்டுமன்றி டாக்டர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கும் கொரோனா வைரஸ் வேகமாக தாக்கி வருவது பெரும் அதிர்ச்சி உள்ளது. இந்த நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் டீன் ஜெயந்தி என்பவர் திடீரென மருத்துவ விடுப்பில் சென்றதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து டீன் பொறுப்பை மருத்துவ கல்வி இயக்குனர் நாராயண பாபு என்பவர் கூடுதலாக கவனிக்க உள்ளார்.

ஏற்கனவே சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் முதுநிலை மாணவர்கள் என மொத்தம் 65 பேர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் தற்போது சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் டீன் திடீரென மருத்துவ விடுப்பில் சென்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

சினிமா ஹாபிதான், இதுதான் முழுநேரத்தொழில்: சமந்தா

தமிழ் தெலுங்கு என தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக இருந்து வரும் சமந்தா தற்போது 'காத்து வாக்குல ரெண்டு காதல்' என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

கொரோனா குணமாகாமல் வீட்டுக்கு சென்ற பிரபல நடிகை: பெரும் பரபரப்பு 

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை ஒருவர் கொரோனா நெகட்டிவ் என்ற ரிசல்ட் வருவதற்கு முன்னரே வீட்டுக்குச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

தோனிதாங்க பெரிய சூப்பர் ஸ்டார்- இப்படி சொன்னது யார் தெரியுமா???

இந்திய கிரிக்கெட் அணியின் லெஜண்டாக கருதப்படும் தோனி சில ஆண்டுகளாக சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் இருந்து விலகியிருக்கிறார்.

புதிய வைரஸால் மீண்டும் ஊரடங்கு உத்தரவு: என்ன நடக்கிறது சீனாவில்?

சீனாவிலுள்ள வூகான் என்ற மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் அதன்பின் சீனா முழுவதும் மிக வேகமாக பரவி அந்நாட்டில் பெரும் உயிரிழப்புக்களை ஏற்படுத்தியது.

தளபதி விஜய்யின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை ஆரம்பித்த வைத்த 21 பிரபலங்கள்

தளபதி விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதிக்கு இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் விஜய் ரசிகர்கள் அவருடைய பிறந்தநாளை சமூக வலைதளங்கள் மூலம் சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர்