close
Choose your channels

ஷங்கரின் '2.0;வில் புகுந்த ராணுவம்

Wednesday, March 2, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும் '2.0' படத்திற்காக பலகோடி மதிப்புள்ள பிரமாண்ட செட் ஒன்று தனியார் தீம் பார்க் ஒன்றில் அமைக்கப்பட்டுள்ளதாக வந்த செய்தி ஏற்கனவே அறிந்ததுதான். இந்நிலையில் இந்த படப்பிடிப்பில் பல மிலிட்டரி டேங்க்குகள் இடம்பெற்றுள்ளதாகவும், இந்த டேங்குகள் ஆக்சன் காட்சி ஒன்றுக்காக பயன்படுத்தப்படவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.


மேலும் இதே செட்டில் பிரமாண்டமான மொபைல் ஷோரூம் ஒன்றின் செட் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த மொபைல் ஷோரூமில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மொபைல்கள் வாங்க முண்டியடித்து கொள்வது போன்ற காட்சி ஒன்றும் படமாக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ரஜினியுடன் இணைந்து நடிக்க ஏற்கனவே அக்சயகுமார் சென்னை வந்துள்ள நிலையில் அவர் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பும் நடைபெறவுள்ளது. ரூ.350 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக 3Dயில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்த படம் இவ்வருட இறுதியில் அல்லது அடுத்த வருட ஆரம்பத்தில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment