கபாலி: ஹவாய் தீவில் ரிலீஸ் ஆகும் முதல் தென்னிந்திய படம்

  • IndiaGlitz, [Monday,July 18 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் ஒவ்வொரு திரையரங்காக செய்யப்பட்டு வரும் நிலையில் ஒவ்வொரு திரையரங்கிலும் முன்பதிவு ஆரம்பித்த ஒருசில நிமிடங்களில் முதல் மூன்று நாட்களுக்குரிய காட்சிகளின் டிக்கெட்டுக்கள் விற்பனை முடிந்து வருகிறது.
தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் இந்த படத்தின் டிக்கெட்டை வாங்குவது ஒரு பெரிய சாதனையை செய்து முடிப்பதுபோல் மக்கள் எண்ணி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள ஹவாய் தீவுகளில் உள்ள Regal Dole Cannery என்ற திரையங்கில் 'கபாலி' படம் ரிலீஸ் செய்யப்படவுள்ளது. இந்த தகவலை சினிகேலக்ஸி நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளது.
இந்த திரையரங்கில் இதற்கு முன்னர் எந்த தென்னிந்திய படம் வெளியானது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. முதன்முதலாக ஹவாய் தீவுகளில் உள்ள ரஜினி ரசிகர்கள் தங்கள் தலைவரின் முகத்தை திரையில் பார்க்கவுள்ளனர்.
மேலும் 'கபாலி' ரிலீஸ் ஆக இன்னும் மூன்றே நாட்கள் உள்ள நிலையில் இன்னும் என்னென்ன சாதனை படைக்கவிருக்கின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

அக்சய்குமார் படத்தை ரீமேக் செய்வாரா உதயநிதி?

பாலிவுட்டில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் படம் 'ஜாலி LLB. இந்த படத்தை தமிழில் உதயநிதி ஸ்டாலின் 'மனிதன்'...

மோகன்லால் நடித்த தமிழ்ப்படத்தின் ரிலீஸ் தேதி

தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு என மூன்று மொழிகளில் மோகன்லால் நடிப்பில் உருவாகி வந்த திரைப்படம் தற்போது ரிலீஸ் கட்டத்தை நெருங்கியுள்ளது...

நதியாவை வில்லனுக்கு ஜோடியாக்கிய ஏ.ஆர்.முருகதாஸ்

மகேஷ்பாபு நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள 'வாஸ்கோடகாமா' படத்தின் ஆரம்பகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ளது. ..

சூப்பர்ஸ்டாரின் அப்பா வேடத்தில் ரீ-எண்ட்ரி ஆகும் சரத்குமார்

கடந்த ஆண்டு சரத்குமார் இரு வேடங்களில் நடித்த 'சண்டமாருதம்' ஓரளவுக்கு சுமாரான வரவேற்பை பெற்றாலும் அதன் பின்னர் அவர்...

ஆயுதபூஜை ரேஸில் இணைந்த விஜய்சேதுபதி படம்

2016ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி அன்று ஆயுதபூஜை விடுமுறை நாளில் ஏற்கனவே சிவகார்த்திகேயனின் பெரும் எதிர்பார்ப்புக்குரிய 'ரெமோ'...