படம் வந்து ஒரு நாள் முடிவடைவதற்குள் இணையத்தில் வெளியான தர்பார்..! ரசிகர்கள் அதிர்ச்சி.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தர்பார் திரைப்படம் இன்று (வியாழக்கிழமை) திரையரங்குகளில் வெளியான நிலையில் அப்படத்தின் தியேட்டர் பிரிண்ட் இணையத்தில் வெளியாகிவிட்டது.

இன்று அதிகாலை சுமார் ஐந்து மணியளவில்தான் தர்பார் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. திரைப்படம் வெளியாகி 24 மணிநேரம் கூட முடியாத நிலையில், முழுத் திரைப்படமும் இணைத்தில் வெளியாகி இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இணையத்தில் பலர் தர்பார் படத்தை டவுன்லோட் செய்யும் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

பொதுவாக, சினிமா வெளியாகி அன்றைய இரவு இணைய தளங்களில் வெளியாகும். ஆனால், தர்பார் விஷயத்தில் 14 மணிநேரத்திலேயே திரைப்படம் வெளியானது தயாரிப்பு தரப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

முன்பு, விஜய்யின் சர்கார் திரைப்படத்தை படம் வெளியாகும் நாளன்றே எங்களது இணையதளத்தில் வெளியிடுவோம் என்று தாங்கள் கூறியதை தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் செய்து காட்டியுள்ளது. சர்கார் திரைப்படம் வெளியான சில மணிநேரங்களிலேயே அந்த திரைப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி பதிப்புகள் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

தமிழ் திரைப்படத்துறைக்கு தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி வருவதாக திரைத்துறையினர் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

More News

#CAA க்கு ஆதரவாக பேசவந்த பாஜக எம்.பியை 6 மணி நேரம் நகரவிடாமல் சிறை பிடித்த மாணவர்கள்..!

மேற்கு வங்க மாநிலத்தின் சாந்திநிகேதனில் குடியுரிமை திருத்த சட்டத்தை விளக்கிப் பேச வந்த பா.ஜ.க ராஜ்யசபா எம்.பி ஸ்வப்பன் தாஸ் குப்தாவை, மாணவர்கள் 6 மணி நேரம் சிறைபிடித்து வைத்தனர்.

10 முதல் 13 ஆயிரம் ரூபாய்.. இந்தியாவில் இன்று வெளியாகிறது ரியல்மீ 5i.

Realme 5i இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் விலை வியட்நாமிய விலைக் குறிக்கு இணையானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

எல்லா அமெரிக்க படைகளையும் உதைத்து வெளியே தள்ளுவோம்...! ஈரான் அதிபர்.

அமெரிக்க படைகள் அனைத்தும் இப்பிராந்தியத்திலிருந்து உதைத்து எறியப்படும் என்று ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார்.

ஜோதிடரின் பேச்சை நம்பி மனைவியை வெட்டிய கணவருக்கு நேர்ந்த விபரீதம்!

ஜோதிடரின் பேச்சை நம்பி மனைவியை அரிவாளால் வெட்டி விட்டு அதன்பின்னர் கணவன் எடுத்த முடிவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

'தர்பார்' படம் குறித்து சிவகார்த்திகேயன் கருத்து

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இன்று முதல் நாள் முதல் காட்சியை பல திரையுலக பிரபலங்கள் தியேட்டரில்