ரஜினிமுருகன்' ரிலீஸ் தேதி. அதிகாரபூர்வ அறிவிப்பு

  • IndiaGlitz, [Saturday,November 28 2015]

திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட 'ரஜினிமுருகன்' திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 4ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக லிங்குசாமி தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.

'ரஜினிமுருகன்' திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதமே ரிலீஸ் ஆகவேண்டிய நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் லிங்குசாமிக்கு ஏற்பட்ட கடன் பிரச்சனை காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் தற்போது இந்த படத்தின் அனைத்து பிரச்சனைகளும் பேசி முடிக்கப்பட்டதாகவும், எனவே ரிலீஸ் தேதி டிசம்பர் 4 என உறுதி செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், சமுத்திரக்கனி, சூரி, ரோபோசங்கர் உள்பட பலர் நடித்துள்ள 'ரஜினிமுருகன்' படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். பாலசுப்பிரமணியன் ஒளிப்பதிவில், விவேக் ஹர்சன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தின் இயக்குனர் பொன்ராம் இயக்கியுள்ளார்.