'காபில்' படக்குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்த 'கபாலி' நாயகர்

  • IndiaGlitz, [Friday,December 23 2016]

கடந்த 1986ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த இந்தி படமான 'பஹ்வான் தாதா' என்ற படத்தை தயாரித்தவர் ராகேஷ் ரோஷன். இந்த படத்தின்போது தொடங்கிய ரஜினி-ராகேஷ் நட்பு 30 வருடங்களாக நீடித்து வருகிறது. கடந்த 12ஆம் தேதி கூட ரஜினிக்கு ராகேஷ் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். அதற்கு ரஜினியும் நன்றி தெரிவித்தார்.

இந்நிலையில் ராகேஷ் ரோஷனின் தயாரிப்பில் ஹிருத்திக் ரோஷன் நடித்த 'காபில்' என்ற திரைப்படம் தமிழிலும் 'பலம்' என்ற பெயரில் வெளியாகவுள்ளது.

இந்த படத்தின் டிரைலரை சமீபத்தில் பார்த்த ரஜினிகாந்த், தனது 30 ஆண்டுகால நண்பர் ராகேஷ் ரோஷனின் படக்குழுவுக்கு குறிப்பாக நாயகன் ஹிருத்திக் ரோஷனுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். "காபில்' படத்தின் தமிழ் – ஹிந்தி மற்றும் தெலுங்கு டிரைலர்களை பார்த்தேன்….அவை என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. ஹிருத்திக் இதில் மிக பிரம்மாண்டமாக தோன்றி இருக்கிறார்… படத்திற்காக நான் மிகுந்த ஆவலோடு காத்து கொண்டிருக்கிறேன் என்று ஹிருத்திக்கிடம் தெரியப்படுத்துங்கள்…" என்று ரஜினிகாந்த் தனது வாழ்த்தில் தெரிவித்துள்ளார்.

சஞ்சய் குப்தா இயக்கத்தில் ஹ்ரித்திக் – யாமி கௌதம் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் வரும் ஜனவரி 25ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

More News

சென்னை திரும்பினார் தல அஜித். குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

கடந்த சில நாட்களாக 'தல 57' படத்தின் படப்பிடிப்புக்காக பல்கேரியா சென்றிருந்த அஜித், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக சென்னை திரும்பியுள்ளார்.

விஜய்சேதுபதியின் 'புரியாத புதிர்'. சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்கள்

2016ஆம் ஆண்டு விஜய்சேதுபதி நடித்த 'சேதுபதி', 'காதலும் கடந்து போகும்', 'இறைவி', 'தர்மதுரை', 'ஆண்டவன் கட்டளை', 'றெக்க' ஆகிய படங்கள் வெளியாகி பாக்ஸ் ஆபீசில் திருப்திகரமான வசூலை கொடுத்தது.

கிறிஸ்துமஸ் விருந்தாக வருகிறது தனுஷின் தோட்டா

தனுஷ் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கி வரும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்புடன் நடந்து வந்த நிலையில் இந்த படத்தின் 85% படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது

த்ரிஷாவாக மாற ஆசைப்படும் விஷால்

விஷால் நடிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவான 'கத்திச்சண்டை' திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் இன்று விஷால் சமூக வலைத்தளம் ஒன்றில் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து உரையாடினார்.

2016ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர். அஸ்வினை தேர்வு செய்த ஐசிசி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னனி ஆல்ரவுண்ரும் தமிழகத்தை சேர்ந்தவருமான அஸ்வின் இந்த ஆண்டுக்கான ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதை பெற்றுள்ளார்.