close
Choose your channels

கபாலி ரிலீஸ் எப்போது? தாணு

Saturday, April 23, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் சமீபத்தில் வெளிவந்த விஜய்யின் 'தெறி' உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் அடுத்ததாக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் தாணு தயாரித்துள்ள மற்றொரு படமான 'கபாலி'

இந்த படம் வரும் மே இறுதியில் அல்லது ஜூன் ஆரம்பத்தில் ரிலீஸ் ஆகும் என ரஜினிகாந்த் சமீபத்தில் தெரிவித்தார். இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்து கலைபுலி எஸ்.தாணு கூறியதாவது: ரஜினிகாந்த் அவர்கள் தற்போதுதான் டப்பிங் பணியை முடித்துள்ளார். இந்த படம் விரைவில் சென்சாருக்கு செல்லவுள்ளது. இந்த படத்தின் சென்சார் முடிந்த பின்னரே ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவிக்க முடியும். எனினும் இந்த அறிவிப்பை மிக விரைவில் எதிர்பார்க்கலாம்' என்று கூறினார்.

தற்போதைய நிலையில் 'தெறி' திரைப்படத்தின் செங்கல்பட்டு பிரச்சனையை எதிர்நோக்கியிருக்கும் தாணு, 'கபாலி' படத்தை தேர்தல் முடிந்தவுடன் புதிய அரசு பொறுப்பேற்றவுடன் தான் ரிலீஸ் செய்வார் என்று கூறப்படுகிறது. மேலும் ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளதால் புதிய வகுப்புகளில் சேர்ப்பது உள்பட அனைத்து பெற்றோர்களும் பிசியாக இருப்பார்கள். மேலும் அந்த சமயத்தில் ரம்ஜான் நோன்பு ஆரம்பித்துவிடும். இதையெல்லால் கருத்தில் கொண்டு 'கபாலி' படத்தை தாணு அவர்கள் ஜூலையில்தான் ரிலீஸ் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment