கொரோனா பாதிப்பு… ஐஸ்வர்யா ரஜினிகாந்தை மீண்டும் தொடரும் சோகம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும் முன்னணி நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகத் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள பதிவில் இந்த 2022 இன்னும் என்னென்ன கொண்டுவருமோ? எனச் சோகத்துடன் பதிவிட்டு இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
சமீபத்தில் நட்சத்திர ஜோடிகளான நடிகர் தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதியினர் தங்களது 18 வருட திருமண வாழ்க்கையை முறித்துக் கொள்ளப்போவதாகத் திடீர் அறிவிப்பு வெளியிட்டு இருந்தனர். இதையடுத்து ஒட்டுமொத்த சினிமா வட்டாரத்திலும் கடும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவாகரத்து செய்தியை ஏற்றுக்கொள்ள விரும்பாத ரசிகர்கள் சிலர் ஏன் இவ்வளவு வருடங்கள் கழித்து பிரிய வேண்டுமா? என ஆதங்கத்தை வெளிப்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் தனுஷ்- ஐஸ்வர்யா இருவருக்கும் இடையே ஏற்பட்டு இருப்பது சாதாரண சண்டைதான் என தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா தகவல் தெரிவித்து இருந்தார். இதையடுத்து தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதிகளைச் சேர்த்து வைப்பதற்கான முயற்சியில் குடும்ப உறுப்பினர்கள் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து முழுமையான தகவல் எதுவும் தெரியாத நிலையில் தற்போது ஐஸ்வர்யா- தனுஷ் இருவருமே வேலை காரணமாக ஹைத்ராபாத்தில் தங்கி அவரவரர் பணிகளில் மூழ்கியுள்ளனர்.
இதையடுத்து ஐஸ்வர்யா தற்போது கையில் பேண்டேஜ்ஜுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு எவ்வளவு பாதுகாப்பாக இருந்தபோதும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. எனவே அனைவரும் கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டு பாதுகாப்பாக இருங்கள். இந்த 2022 எனக்கு இன்னும் என்னென்ன கொண்டு வரப்போகிறதோ? என ஆதங்கத்துடன் பதிவிட்டு இருக்கிறார். இந்தப் பதிவு ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த சில தினங்களாக ஐஸ்வர்யா- தனுஷ் தம்பதிகளின் விவாகரத்து தகவல் பரபரப்பாகப் பேசப்பட்டபோதும் ஐஸ்வர்யா தன்னுடைய சோஷியல் மீடியா பக்கங்களில் உள்ள “ஐஸ்வர்யா-ஆர்-தனுஷ்“ எனும் பெயரை இன்னும் மாற்றாமல் வைத்திருக்கிறார். இதனால் இந்த ஜோடி மீண்டும் இணைந்து விடுவார்கள் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஐஸ்வர்யா விரைவில் குணமடைய வேண்டும் என்று ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறிவருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com