ரஜினியின் '2.0' டீசர், டிரைலர், இசை வெளியீட்டு குறித்த அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்து வரும் '2.0' படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் பல்வேறு நாடுகளில் நடந்து கொண்டிருக்கின்றது. இந்த படத்தின் மேக்கிங் வீடியோ சமீபத்தில் வெளிவந்து இணையதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது தெரிந்ததே
இந்த நிலையில் லைகா நிறுவனத்தின் ராஜூ மகாலிங்கம் இந்த படத்தின் டீசர், டிரைலர் மற்றும் இசை வெளியீடு வெளியாகும் இடம் மற்றும் மாதம் குறித்த அறிவிப்பை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இதன்படி '2.0' படத்தின் இசை வெளியீடு வரும் அக்டோபர் மாதம் துபாயிலும், ஐதராபாத்தில் வரும் நவம்பர் மாதம் டீசரும், சிங்கார சென்னையில் வரும் டிசம்பர் மாதம் டிரைலரும் வெளியாகும் என்று அறிவித்துள்ளார். '2.0' படத்தின் விழா தொடங்கிவிட்டதாக ராஜூ மகாலிங்கம் கூறியுள்ளதை அடுத்து ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
"Festivities to Begin" Come Oct -Audio Release in Dubai!!! Nov-Teaser in Hyderabad and Dec-Trailer in Namma Singara Chennai!!! 2.0 Loading!!
— Raju Mahalingam (@rajumahalingam) September 7, 2017
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com