ஸ்டாலினை அடுத்து இன்னொரு பிரபலத்திற்கும் வாழ்த்து கூறிய ரஜினிகாந்த்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது என்பதும் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் இன்னும் ஒரு சில நாட்களில் முதல்வராக பதவி ஏற்கப் போகிறார் என்பதும் தெரிந்ததே. தமிழக முதல்வராக முதல் முறையாக பதவி ஏற்கப் போகும் ஸ்டாலின் அவர்களுக்கு திரையுலகினர் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் குவித்து வந்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான், விஷால், தனுஷ், தாணு, உள்பட பலர் ஸ்டாலினை பாராட்டி நிலையில் பாராட்டினார் என்பது தெரிந்ததே. குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தினார் என்பதும் தனது டுவிட்டரிலும் ஒரு வாழ்த்து டுவிட்டை பதிவு செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் ஸ்டாலினை அடுத்து மேலும் பிரபலம் ஒருவருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வாழ்த்து தெரிவித்து இருப்பது தெரியவந்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ள அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அவர்களுக்கு தான் தொலைபேசியில் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தகவல் தற்போது சமூக வலைதளங்களில் ஆகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout