ரொம்ப நாளைக்கு அப்புறம் தமிழில் தரமான படம் வந்துருக்கு.. ரஜினிகாந்த் வாழ்த்து..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ரொம்ப நாளைக்கு அப்புறம் தமிழில் தரமான படம் வந்துருக்கு என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ‘வாழை’ படத்தை இயக்கிய மாரி செல்வராஜ்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ‘வாழை’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினர், அரசியல்வாதிகளும் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தளத்தில் ‘வாழை’ படம் பார்த்து இயக்குனர் மாரி செல்வராஜுக்கு தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார். அவர் இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:
மாரி செல்வராஜ் அவர்களுடைய வாழை படம் பார்த்தேன். ஒரு அற்புதமான, தரமான படம் தமிழில் ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்துருக்கு.
மாரி செல்வராஜ் தன்னுடைய இளமை பருவத்திற்கே நம்மை அழைத்து சென்றிருக்கிறார். அதில் அந்த பையன் அனுபவிக்கும் துன்பங்கள், கஷ்டங்கள் அதை நாமே அனுபவிப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது.
கிளைமாக்ஸில் அந்த பையன் பசியை தாங்காமல் அலையும் போது, அந்த தாய் என் பையனுக்கு ஒரு கை சோறு சாப்பிட விடவில்லை என்று கதறும் போது, நமது நெஞ்சமெல்லாம் துடிக்கின்றது.
மாரி செல்வராஜ் தான் ஒரு தலைசிறந்த இயக்குனர் என்பதை இந்த படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார். மாரி செல்வராஜ் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துக்களும்.
— Rajinikanth (@rajinikanth) September 2, 2024
அன்று பழைய தகரபெட்டிக்குள் உங்கள் புகைப்படங்களை தேடி தேடி சேகரித்து வைத்த அந்த சிறுவனின் கனவுக்குள்ளிருந்து அவனின் பிஞ்சு விரல்களை கொண்டே எழுதி சொல்கிறேன் . உங்கள் வாழ்த்திற்கும் அரவணைப்புக்கும் நன்றிகள் எங்கள் சூப்பர் ஸடார் அவர்களே ✡️🤩 @rajinikanth sir ❤️❤️#vaazhai pic.twitter.com/14itPp3zcR
— Mari Selvaraj (@mari_selvaraj) September 2, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments