தமிழர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

  • IndiaGlitz, [Sunday,April 14 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தமிழர்கள் கொண்டாடும் ஒவ்வொரு பண்டிகையின்போதும் தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழர்களுக்கு வாழ்த்து கூறுவதை ஒரு வழக்கமாக கொண்டுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.

அந்த வகையில் இன்று தமிழகத்தில் உள்ள தமிழர்களும் உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களும் சித்திரை முதல் நாளான தமிழ்ப்புத்தாண்டை கொண்டாடி வரும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தள பக்கத்தில், 'அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்' என்று பதிவு செய்துள்ளார்.

ரஜினியின் இந்த டுவீட் பதிவு செய்யப்பட்ட சிலமணி நேரங்களில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்ஸ்களும், ஆயிரத்திற்கும் மேலான ரீடுவீட்டுகளும், குவிந்து வருகிறது. அவரது ரசிகர்களும் கமெண்ட் பகுதியில் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.