கோடி கோடி மக்களை மகிழ்வித்த எஸ்பிபி சிக்கிரம் குணமாக வேண்டும்: ரஜினிகாந்த்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அபாய கட்டத்தில் இருந்த அவர் தற்போது உடல்நிலை தேறி வருவதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் எஸ்பிபி மிக விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என்று இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குனர் இமயம் பாரதிராஜா, கவியரசு வைரமுத்து உள்பட அனைத்து திரையுலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று எஸ்பிபி விரைவில் குணமாகி வரவேண்டும் என்று கமல்ஹாசன் தனது டுவிட்டரில் தெரிவித்திருந்த நிலையில் இன்று ரஜினிகாந்த் இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:
50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் உள்ள பல மொழிகளில் தன்னுடைய இனிமையான குரலில் பாடி கோடி கோடி மக்களை மகிழ்வித்த எஸ்பிபி அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார் என்று கேள்விப்பட்டதும் எனக்கு மகிழ்ச்சி. இன்னும் தீவிர சிகிச்சையில் இருக்கும் எஸ்பிபி அவர்கள் சீக்கிரம் குணமடைய வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்’ இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
Get well soon dear Balu sir pic.twitter.com/6Gxmo0tVgS
— Rajinikanth (@rajinikanth) August 17, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments