சென்னை திரும்பிய ரஜினிகாந்த்.. பிரதமர் மோடிக்கும் 2 நண்பர்களுக்கும் வாழ்த்து..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இமயமலைக்கு ஆன்மீக சுற்றுப்பயணம் சென்றார் என்பதும் அவர் கேதார்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட பகுதிகளில் இருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் ரஜினிகாந்த் இமயமலை சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு டெல்லி செல்ல இருப்பதாகவும் பிரதமர் மோடி, சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோரை சந்தித்து விட்டு அதன் பின் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளப் போவதாகவும் கூறப்பட்டது.
ஆனால் ரஜினிகாந்த் இமயமலையிலிருந்து நேராக இன்று சென்னை திரும்பிய நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தேர்தல் வெற்றி குறித்த கேள்விக்கு பதில் அளித்த போது ’பிரதமர் மோடி அவர்களுக்கு தனது வாழ்த்து தெரிவித்தார்.
அது மட்டும் இன்றி தனது நண்பர்கள் ஆன தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் ஆந்திர முதல்வராக பதவியேற்க இருக்கும் சந்திரபாபு நாயுடு ஆகிய இருவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்க இருப்பதற்கு தனது வாழ்த்துக்கள் என்றும் அவர் தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார்.
மேலும் வரும் 8ஆம் தேதி மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க இருப்பதாக கூறப்படும் நிலையில் அந்த விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
My Hearty Congratulations to my dear friends .. Honourable Chief Minister of Tamil Nadu M.K Stalin @mkstalin ...and Shri Chandrababu Naidu Garu @ncbn
— Rajinikanth (@rajinikanth) June 5, 2024
I extend my hearty congratulations to NDA #nda and most respected dear Narendra Modiji @narendramodi 🙏🏻🇮🇳
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com