'லால் சலாம்' ரிலீஸ் நாளில் இரண்டாவது தாய்க்கு வாழ்த்து கூறிய ரஜினிகாந்த்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’லால் சலாம்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ள நிலையில் முதல் காட்சி முடிந்ததுமே இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது. எனவே இந்த படம் வசூலில் சாதனை செய்யும் என்றும் வெற்றி படம் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தளத்தில் தனது மகள் ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்து செய்தியில் அவர் கூறியிருப்பதாவது: என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம். உங்களுடைய 'லால் சலாம்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
ஏற்கனவே சமீபத்தில் நடைபெற்ற 'லால் சலாம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தான் உடல்நிலை சரியில்லாத போது ஐஸ்வர்யா தன்னை மிகுந்த கவனத்துடன் பார்த்துக் கொண்டதாகவும், என்னை பொருத்தவரை ஐஸ்வர்யா எனது இரண்டாவது தாய் என்றும் தெரிவித்து இருந்தார். அந்த வகையில் தற்போது ஐஸ்வர்யாவை தனது தாய் என்று அவர் தனது வாழ்த்து செய்தி குறிப்பிட்டு இருந்தது நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
மேலும் தான் உடல் நலமில்லாமல் மருத்துவமனையில் அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற போது தன்னை கவனித்துக் கொண்ட ஐஸ்வர்யாவின் புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம்.உங்களுடைய லால் சலாம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்@ash_rajinikanth #LalSalaam pic.twitter.com/bmRe8AGLkN
— Rajinikanth (@rajinikanth) February 9, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com