ட்விட்டரில் ஒன்னுமே இல்லையே..! துணை முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்தாரா ரஜினிகாந்த்?

  • IndiaGlitz, [Monday,September 30 2024]

தமிழக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று துணை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில், கிட்டத்தட்ட அனைத்து அரசியல்வாதிகளும், திரையுலக பிரபலங்களும் தங்களது சமூக வலைதளங்கள் மூலம் அல்லது நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

குறிப்பாக உலக நாயகன் கமல்ஹாசன் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தார். அதேபோல் தனுஷ், சிம்பு, கார்த்தி, ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபு, மாரி செல்வராஜ், அருள்நிதி உள்ளிட்ட பலரும் தங்களது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தனர்.

ஆனால், ரஜினிகாந்த் துணை முதல்வருக்கு தனது எக்ஸ் பக்கத்தில் எந்தவிதமான வாழ்த்து பதிவும் செய்யாத நிலையில், அவர் தொலைபேசி மூலம் உதயநிதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தமிழ் திரையுலகில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து நட்சத்திரங்களும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

விஜய்யின் 'தளபதி 69' படத்தின் கதை இதுவா? தேர்தல் நேரத்தில் சரியான கதை தான்..!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 69வது திரைப்படத்தை எச் வினோத் இயக்கவிருக்கும் நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு, தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு முடிந்த பிறகு தொடங்கும் என்று

அட்லியின் 6வது படம்.. ஒரே படத்தில் 3 பிரபலங்களா?

இயக்குனர் அட்லியின் 6வது திரைப்படத்தில் மூன்று பிரபலங்கள் இணைய இருப்பதாகவும், கிட்டத்தட்ட இந்த படம் உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.

'டாப் குக்கு டூப் குக்கு' டைட்டில் வின்னர் யார்? 2ஆம் இடம், 3ஆம் இடம் யாருக்கு?

சன் டிவியில் கடந்த சில மாதங்களாக ஒளிபரப்பான 'டாப் குக்கு டூப் குக்கு' நிகழ்ச்சி இன்று முடிவடைந்த நிலையில், இன்றைய நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் யார், இரண்டாம் இடம், மூன்றாம் இடம் பிடித்தவர்கள்

அனுஷ்கா நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம்.. உறுதி செய்த இயக்குனர்..!

அனுஷ்கா நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக இருப்பதாக அந்த படத்தின் இயக்குனர் கூறியுள்ளதை அடுத்து, அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நல்லவேளை கமல்ஹாசனுடன் நடிக்கவில்லை.. 2 படங்களை மிஸ் செய்த தகவல் கூறிய அரவிந்த்சாமி..!

சூப்பர் ஸ்டார்ஜ் ரஜினிகாந்த் அவர்களுடன் 'தளபதி' திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்ற அரவிந்த்சாமி, உலகநாயகன் கமல்ஹாசனுடன் இரண்டு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாகவும்,