close
Choose your channels

பழையபடி கேப்டனாக கர்ஜிக்க வேண்டும்: ரஜினிகாந்த் பிரார்த்தனை

Wednesday, June 22, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கேப்டன் விஜயகாந்த் பழைய கேப்டனாக மீண்டும் கர்ஜிக்க வேண்டும் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். சமீபத்தில் அவர் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் நீரிழிவு நோய் காரணமாக அவரது கால்விரல்கள் அகற்றப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் விஜயகாந்த் உடல் நலம் பெற்று மீண்டும் வீடு திரும்ப வேண்டும் என பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் என் அருமை நண்பர் விஜயகாந்த் அவர்கள் விரைவில் குணமடைந்து பழையபடி கேப்டனாக வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் விஜயகாந்த் ஆகிய இருவரும் பல ஆண்டுகால நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தனது வாழ்த்துச் செய்தியில், ‘எனது அருமை நண்பர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்தேன். அவர் விரைவில் நலம் பெற்று உடல் நலத்துடன் இல்லம் திரும்ப விழைகிறேன்’ என்று பதிவு செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment