ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆஸ்கார் நாயகன், இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் அவர்கள் தயாரித்து, இசை அமைத்து, கதை எழுதிய ’99 சாங்ஸ்’ என்ற திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது என்பதும் இந்த படத்தை பார்த்த விமர்சகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை பதிவு செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் படத்தை கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஏஆர் ரஹ்மான் எழுதி இசை அமைத்து தயாரித்த ‘99 சாங்ஸ்’ திரைப்படம் வெற்றி அடையவேண்டும் என்று திரையுலக பிரபலங்கள் பலர் தங்களுடைய சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் நேற்று இரவு சத்யம் தியேட்டரில் திரையிடப்பட்ட சிறப்பு காட்சியை பார்த்து பல திரையுலக பிரபலங்கள் ஏஆர் ரஹ்மானுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்
இந்த நிலையில் சற்று முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கு தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார் அவர் தனது வாழ்த்தில், ‘இன்று ரிலீஸ் ஆகும் ‘99 சாங்ஸ்’ திரைப்படம் வெற்றியடைய எனது வாழ்த்துக்கள். கடவுளின் ஆசி உங்களுக்கு எப்போதும் உண்டு’ என்று தெரிவித்துள்ளார்,.
Wishing you the very best always and for the release of your film #99Songs dear @arrahman ji. May god bless you pic.twitter.com/WEWc1uKbSp
— Rajinikanth (@rajinikanth) April 16, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com