கடவுள் ஆசீர்வதிக்கட்டும்: சற்றுமுன் ரஜினியின் ஆசி யாருக்கு தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சற்று முன் தனது டுவிட்டர் பக்கத்தில் கடவுள் ஆசீர்வதிக்கட்டும் என டுவிட் செய்துள்தை அடுத்து இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று முதல் சென்னையில் நடைபெறுகிறது என்பதும் இன்றைய தொடக்க விழாவில் பாரத பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இன்று தொடங்கும் செஸ் போட்டியில் விளையாடும் செஸ்வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், முன்னாள் இந்நாள் செஸ் சாம்பியன்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் செஸ் வீரர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ‘நான் மிகவும் விரும்பும் ஒரு உள்ளரங்க விளையாட்டு செஸ் என்றும் அனைத்து வீரர்களுக்கும் இந்த போட்டி சிறப்பாக இருக்க வாழ்த்துக்கள் என்றும் கடவுள் ஆசீர்வதிக்கட்டும்’ என்றும் பதிவு செய்துள்ளார்.
#ChessOlympiad2022 An indoor game I love the most … wishing all the chess minds the very best .. god bless. pic.twitter.com/nVZ8SU51va
— Rajinikanth (@rajinikanth) July 28, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments