இதுவும் கடந்து போகும்: ரஜினியின் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து

  • IndiaGlitz, [Tuesday,April 14 2020]

இன்று உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் கொரோனா வைரஸ் பீதியையும் தாண்டி தமிழ்ப்புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். அதேபோல் அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் உள்பட பலர் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தமிழர்களுக்கு தனது தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்தில் கூறியதாவது:

இந்தப்‌ புதிய ஆண்டு இனிதாக இருக்கட்டும்‌.
இந்த துயரமான நேரத்தில்‌ உயிரைப்‌ பணயம்‌
வைத்து மக்களுக்கு சேவை செய்து
கொண்டிருக்கும்‌ ரஜினி மக்கள்‌ மன்ற
உறுப்பினர்களுக்கு என்‌ நெஞ்சார்ந்த
பாராட்டுகள்‌. அரசாங்கம்‌ விதித்திருக்கும்‌
கட்டுப்பாடுகளைத்‌ தவறாமல்‌ கடைபிடித்து
பாதுகாப்பாக இருங்கள்‌

இதுவும் கடந்து போகும்‌

என்று ரஜினிகாந்த் தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார். ரஜினியின் இந்த டுவீட்டுக்கு லைக்ஸ்கள் மற்றும் கமெண்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

More News

மாண்ட மருத்துவருக்கு சிதை நெருப்பு தர மனமில்லையா? சீனுராமசாமி ஆவேச கவிதை

சென்னையில் கொரோனாவால் உயிரிழந்த ஆந்திர மருத்துவர் ஒருவரை தகனம் செய்ய அனுமதிக்க மாட்டோம் என நேற்று முதல் அம்பத்தூர் பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்

தமிழ்ப்புத்தாண்டு, அம்பேத்கர் பிறந்த நாள் வாழ்த்து கூறிய கமல்ஹாசன்!

இன்று உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் தமிழ்ப்புத்தாண்டு தினத்தையும் நாடு முழுவதிலும் உள்ள மக்கள் அம்பேத்கர் பிறந்த நாளையும் கொண்டாடி வரும் நிலையில் நடிகரும்

சென்னை ராயபுரத்தில் அதிகபட்ச கொரோனா பாதிப்பு: மற்ற இடங்களில் எப்படி?

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதாகவும், இதனை அடுத்து தமிழகத்தில் மொத்தம் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  1173

என்னால்‌ முடிந்தவரை உதவி வருகிறேன்: ராகவா லாரன்ஸின் தமிழ்ப்புத்தாண்டு அறிவிப்பு!

நடிகரும் நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ் சமீபத்தில் கொரோனா தடுப்பு நிவாரண நிதியாக ரூபாய் 3 கோடி அளித்திருந்த நிலையில் மேலும் பலர் தன்னிடம் தொலைபேசி

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்கள்!

இன்று காலை 10 மணிக்கு நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றியபோது ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்