ரஜினிகாந்த் திடீரென டெல்லி செல்கிறாரா? மோடி, சந்திரபாபு நாயுடுவுடன் சந்திப்பா?

  • IndiaGlitz, [Wednesday,June 05 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஆன்மீக பயணமாக இமயமலை சென்றுள்ளார் என்பதும் அவர் கேதார்நாத், பத்ரிநாத் மற்றும் பாபா குகை ஆகிய பகுதிகளுக்கு சென்ற புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆனது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி புதிய ஆட்சி அமைய இருக்கும் நிலையில் மீண்டும் ஆட்சி அமைக்க குடியரசு தலைவரிடம் பிரதமர் மோடி உரிமை கோர இருப்பதாகவும் ஜூன் 8-ம் தேதி பதவியேற்பு விழா நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள ரஜினிகாந்த் செல்ல இருப்பதாகவும் இமயமலையிலிருந்து நேராக அவர் டெல்லி செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி ரஜினியின் நெருங்கிய நண்பரான சந்திரபாபு நாயுடுவை சந்திக்கவும் அவர் டெல்லி செல்ல இருப்பதாகவும் பிரதமர் மோடி மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகியோர்களிடம் ரஜினிகாந்த் முக்கிய பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் டெல்லி செல்ல இருப்பதாக செய்திகள் சமூக வலைதளங்களில் கசிந்து வந்தாலும் ரஜினிகாந்த் தரப்பில் இருந்து இன்னும் இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஹாட்ஸ்டாரில்  'உப்பு புளி காரம்'.. பிரேக் அப் ஆன காதலனை சந்தித்த சின்மயி வாழ்வில் திருப்பம்..!

ஹாட்ஸ்டாரில் 'உப்பு புளி காரம்' என்ற வெப் தொடர் கடந்த 30ஆம் தேதி முதல் நான்கு எபிசோடுகள் வெளியாகி உள்ள நிலையில் அதன் இரண்டு எபிசோடுகளின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம்.

பிரேம்ஜியின் மணமகள் குறித்து குழப்பம்.. சொப்பன சுந்தரி உதாரணத்துடன் விளக்கம் அளித்த வெங்கட் பிரபு..

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் பிரேம்ஜிக்கு திருமணம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் திருமண பத்திரிகை புகைப்படம் இணையத்தில் வைரல் ஆனது என்பதை பார்த்தோம்.

கமல்ஹாசன் அடுத்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..! இசையமைப்பாளரின் மாஸ் அறிவிப்பு..

உலகநாயகன் கமல்ஹாசனின் அடுத்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவருடைய ரசிகர்கள் குஷி ஆகி உள்ளனர்.

அந்தரத்தில் தொங்கிய கேமிராமேன்.. தனுஷ் படத்திற்காக உயிரை பணயம் வைத்த வீடியோ.. !

தனுஷ் நடித்து வரும் 'குபேரா' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது எடுத்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை நழுவவிட்ட விஜய பிரபாகரன்..  நெகிழ்ச்சியான பதிவு..!

நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று முதல் நடைபெற்று வரும் நிலையில் வெற்றி, தோல்வி குறித்த தகவல்களும் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டு வருகிறது என்பதும் தெரிந்தது.