சிஏஏ சட்டதிருத்தம்: களத்தில் இறங்க ரஜினிகாந்த் முடிவு
Send us your feedback to audioarticles@vaarta.com
மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய சிஏஏ சட்டத்திற்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த ஒரு வாரமாக இஸ்லாமிய அமைப்பினர் போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர தமிழக அரசு தீவிரமாக முயற்சித்து வருகிறது. இஸ்லாமிய அமைப்பின் நிர்வாகிகள் நேற்று தமிழக முதல்வரை சந்தித்து ஆலோசனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சிஏஏ சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், இந்த சட்டத்தால் இந்திய முஸ்லிம்களுக்கு எந்த வித பாதிப்பும் இருக்காது என்றும் இந்திய முஸ்லிம்களுக்கு ஒருவேளை ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் தான் முதல் ஆளாக குரல் கொடுப்பேன் என்றும் கூறியிருந்தார்
மேலும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அளித்த பேட்டியின் போதும் ’சட்டம் வாபஸ் வாங்கப்படும் என்ற நம்பிக்கை தனக்கு இல்லை என்றும் அது குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று அமல்படுத்தப்பட்டது என்றும் இந்த போராட்டம் தேவையற்றது என்றும் அவர் கூறினார்.
இந்த நிலையில் ரஜினிகாந்தின் இந்த கருத்துக்கு இஸ்லாமிய அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் சென்னையில் போராடி வரும் இஸ்லாமிய அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் மத குருமார்களை ரஜினிகாந்த் அவரது இல்லத்தில் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த சந்திப்பு மிக விரைவில் நடைபெறும் என்றும், சிஏஏ தொடர்பான தனது நிலைப்பாட்டை இஸ்லாமிய மத குருமார்களிடம் ரஜினிகாந்த் விளக்கதிட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout