காவிரியும் கருப்பு உடையும்: ரஜினி இதை செய்வாரா?
Send us your feedback to audioarticles@vaarta.com
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற தீவிரமான போராட்டத்தை திசை திருப்பும் வகையில் உள்ள ஐபிஎல் போட்டியை நடத்த கூடாது என்றும் மீறி நடத்தினால் வீரர்களை கடத்துவோம் என்றும் ஒருசில அரசியல் கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர். மேலும் இன்றும் ஒருசில அரசியல் கட்சி தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் சென்னையில் நாளை நடக்கக்கூடிய ஐபிஎல் போட்டியை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், காவிரிக்காக தமிழகமே ஒன்றிணைந்து போராடி வரும் நிலையில் ஐபிஎல் போட்டியை நிறுத்துவது குறித்து ஐபிஎல் நிர்வாகிகள் யோசிக்கலாம். அப்படி ஒருவேளை நடத்தினாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடினால் காவிரி பிரச்சனை இந்தியா முழுவதும் செல்ல ஒரு வாய்ப்பு இருக்கின்றது. இதற்கு ஐபிஎல் நிர்வாகிகளும் வீரர்களும் ஒத்துழைக்க வேண்டும். இதுவும் இல்லையென்றால் போட்டியை பார்க்க செல்லும் இளைஞர்கள், மாணவர்கள், மாணவிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக கருப்பு உடை அணிந்து போகலாம்' என்று யோசனை கூறியுள்ளார். ரஜினியின் இந்த கருத்தை நெட்டிசன்கள் உள்பட பலர் பாராட்டியுள்ளனர்.
இந்த நிலையில் கருப்பு உடை அணிந்து போட்டியை பார்க்க செல்லலாம் என்ற யோசனையை கூறிய ரஜினிகாந்தே கருப்பு உடை அணிந்து நாளை போட்டி நடக்கும் மைதானத்திற்கு வந்தால் உலகம் முழுவதற்கும் இந்த காவிரி பிரச்சனை சென்றடையும் என்று நெட்டிசன்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர். கருப்பு உடையணிந்து மைதானத்திற்குள் ரஜினி சென்றால் அனைத்து கேமிராக்களும் பந்தை நோக்கி திரும்புவதை விட ரஜினியை நோக்கியே அதிகம் திரும்பும். அப்போது அவர் கருப்பு உடையில் இருப்பதையும், அவர் கையில் காவிரி குறித்த பதாகையும் இருந்தால் அதைவிட பெரிய காவிரி போராட்டம் தேவையில்லை என்பதே பலரது கருத்தாக உள்ளது. காவிரி போராட்டத்தை உலகின் கவனத்திற்கு கொண்டு செல்லும் நல்ல வாய்ப்பை பயன்படுத்த நாளை சென்னை மைதானத்திற்கு ரஜினி கருப்பு உடையுடன் செல்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments